சும்மா சண்டை போட்டுக் கொண்டே இருக்க.. ஆத்திரத்தில் மனைவியின் கை விரலை கடித்து துப்பிய கணவர்..!
கடந்த ஜூலை மாதம் 28ம் தேதி அன்று மாலை 4 மணியளவில் விஜய் குமார், புஷ்பாவின் குடியிருந்த வீட்டிற்கு சென்றுள்ளார். அப்போது மீண்டும் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
குடும்பத் தகராறில் ஆத்திரத்தில் மனைவியின் விரலை கடித்து துப்பிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக கணவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கர்நாடகா மாநிலம் பெங்களூருவைச் சேர்ந்தவர் விஜய் குமார். இவரது மனைவி புஷ்பா. இவர்களுக்கு மகன் ஒருவர் உள்ளார். இவர்களுக்கு 26 ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடைபெற்றுள்ளது. இவருக்கும் இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்படுவது வழக்கமான ஒன்றாக இருந்து வருகிறது. பிறகு இருவீட்டாரும் சமாதானம் செய்து வைத்துள்ளனர். சமீபத்தில் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் தனித்தனியே வாழ்ந்து வந்துள்ளனர்.
இதையும் படிங்க;- வேணாம் என்ன விட்டுடு ப்ளீஸ்! நான் உனக்கு அண்ணி! எவ்வளவு சொல்லியும் கேட்காமல் கதறவிட்ட கொழுந்தன்! நடந்தது என்ன?
இந்நிலையில், கடந்த ஜூலை மாதம் 28ம் தேதி அன்று மாலை 4 மணியளவில் விஜய் குமார், புஷ்பாவின் குடியிருந்த வீட்டிற்கு சென்றுள்ளார். அப்போது மீண்டும் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதனால், ஆத்திரமடைந்த கணவர் மனைவி புஷ்பாவின் கை விரலை பிடித்து கடித்து மென்று துப்பியுள்ளார்.
இதையும் படிங்க;- சுவிட்ச் ஆப் செய்யாமல் தொங்கியபடி கிடந்த சார்ஜர் வயர்! வாயில் வைத்த 8 மாதக் குழந்தை துடிதுடித்து பலி..!
வலியால் புஷ்பா அலறியதை அடுத்து அக்கம் பக்கத்தினர் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். இதுகுறித்து புஷ்பா காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து கணவரை கைது செய்தனர்.