நெல்லை பேட்டையில் உள்ள சர்தார் புரத்தை சேர்ந்தவர் குட்டி என்ற சுடலை . ஆட்டோ டிரைவரான இவர்  தனது ஆட்டோவை டவுன் ஆர்ச் அருகே நிறுத்தி விட்டு, சவாரிக்காக காத்து நின்றார். அப்போது அங்கு அரிவாளுடன் வந்த 2 பேர் கண்ணிமைக்கும் நேரத்தில் சுடலையை சரமாரி வெட்டினர்.

இதில் சம்பவ இடத்திலேயே சுடலை ரத்த வெள்ளத்தில் பிணமானார். அப்போது நள்ளிரவு 11.30 மணி என்பதால் அந்த பகுதியில் மக்கள் நடமாட்டம் இல்லை. பஸ்சுக்காக காத்து நின்ற சிலரும் பதறி அடித்து ஓட்டம் பிடித்தனர்.

சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த காவல் துறையினர்  கொலைக்கான காரணம் என்ன என்று விசாரணை நடத்தினர். அதில் பல திடுக்கிடும் தகவல்கள் கிடைத்தன. கொலை செய்யப்பட்ட சுடலையின் மனைவிக்கு கடந்த 3 நாட்களுக்கு முன்பு தான் குழந்தை பிறந்துள்ளது. 

இதனால் அவரது மனைவி தாய் வீட்டுக்கு சென்று விட்டார். இங்கே தனியாக இருந்த சுடலை அந்த பகுதியை சேர்ந்த முருகன் மனைவி இசக்கியம்மாளுடன் சகஜமாக பேசி பழகி வந்தார். இதில் அவர்களுக்குள் இடையே கள்ளத்தொடர்பு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து முருகன் தனது மனைவியையும், ஆட்டோ டிரைவர் சுடலையையும் எச்சரித்துள்ளார். அதையும் மீறி அவர்கள் மறைமுகமாக சந்தித்து உல்லாசமாக இருந்து வந்துள்ளனர்.

இதில் ஆத்திரம் அடைந்த முருகன், சுடலையை கொலை செய்ய திட்டம் தீட்டினார். அதே பகுதியை சேர்ந்த தனது நண்பர் மற்றொரு முருகன் என்பவரை உதவிக்கு அழைத்துக்கொண்டு டவுன் ஆட்டோ நிறுத்தம் இடத்துக்கு சென்றனர்.

அங்கு சுடலைக்காக காத்து நின்றனர். நள்ளிரவு சுடலை அங்கு வந்ததும் 2 பேரும் அவரை சரமாரியாக வெட்டி கொலை செய்து விட்டு தப்பி ஓடிவிட்டனர். இதையடுத்து  தப்பி ஓடிய இரண்டு முருகன்களையும் வலைவீசி தேடி வருகிறார்கள்.

குழந்தை பிறந்து சில நாட்களிலேயே சுடலை வெட்டிக்கொலை செய்யப்பட்டது அவர்களுக்கு பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.