மேட்டுப்பாளையத்தில் டாஸ்மாக் கலெக்சன் பணம் ரூ.10 லட்சத்தை வங்கியில் செலுத்த சென்ற டாஸ்மாக் சூப்பர்வைசரை அரிவாளல் மிரட்டி பணத்தை கொள்ளை முயற்சி செய்தவர்களின் வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.   

டாஸ்மாக் ஊழியரிடம் கொள்ளை

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தை அடுத்துள்ள சிறுமுகையில் இருந்து அன்னூர் செல்லும் சாலையில் டாஸ்மாக் கடை செயல்பட்டு வருகிறது. இதன் சூப்பர்வைசராக உதகையை சேர்ந்த விஜய் ஆனந்த்(46) என்பவர் பணியாற்றி வருகிறார்.இந்நிலையில் நேற்று மதியம் 2 மணியளவில் வழக்கம் போல் டாஸ்மாக்கில் வசூலான பணம் ரூ.10 லட்சத்தை தனது டூவீலரில் வைத்துக்கொண்டு மேட்டுப்பாளையம் இந்தியன் வங்கிக்கு சென்றுள்ளார். அப்போது, சிறுமுகை நெடுஞ்சாலையில் ஆலாங்கொம்பு அருகே வந்து கொண்டிருந்தபோது 2 இருசக்கார வாகனத்தில் வந்த 4 பேர் விஜய் ஆனந்தை அரிவாளை காட்டி மிரட்டி பணத்தை கொள்ளையடிக்க முயற்சி செய்துள்ளனர்.

காதலனை விஷம் கொடுத்து கொன்ற காதலி.. என்ன காரணம் தெரியுமா? வெளியான பரபரப்பு தகவல்..!

அரிவாளை காட்டி மிரட்டிய மர்ம கும்பல்

அப்போது விஜய் ஆனந்தை பைக்கில் இருந்து தள்ளிவிட்ட மர்ம நபர்கள் பணத்தை பறிக்க முயன்றுள்ளனர். அப்போது விஜய் ஆனந்த் கத்தி கூச்சல் போடுகிறார். இதை அந்த வழியாக சென்ற பலர் வேடிக்கை பார்த்தவாறே செல்கின்றனர். இதனையடுத்து மர்ம நபர்களால் பணத்தை கொள்ளையடிக்க முடியாததால் அந்த இடத்தில் இருந்து தப்பி ஓடினர். பட்டப்பகலில் நடைபெற்ற இந்த சம்பவத்தின் வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

இதே நபரிடம் கடந்த ஜூலை மாதம் பணத்தைப் பறிக்க ஒரு கும்பல் முயற்சி செய்தது குறிப்பிடத்தக்கது. பணம் கொள்ளை முயற்சி தொடர்பாக சிறுமுகை காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

இதையும் படியுங்கள்

எங்களுக்கு பீர் மட்டும் போதும் தல.! டாஸ்மாக்கில் ஓட்டை போட்டு திருடிய கொள்ளையர்கள் - அதிர்ச்சி சம்பவம்