Asianet News TamilAsianet News Tamil

அய்யோ... அய்யய்ய்ய்யோ... உ.பி. யில் பாலியல் வல்லுறவுக்காகி இறந்த பெண்ணின் சாதியினருக்கு இத்தனை கொடுமைகளா..?

எலியைத் திண்பதால் அவர்களது வீடுகளும் எலி நுழைவதைப் போலவே இருக்க வேண்டும் என்பது இன்றைய தேதி வரை அங்கு நீடிக்கும் ஏற்பாடு. 

Are the castes of the woman who died for rape so cruel ..?
Author
Uttar Pradesh West, First Published Oct 1, 2020, 6:38 PM IST

உத்திரப் பிரதேசத்தில் இளம்வயது பெண் கூட்டு பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டு, கொடூரமாக தாக்கப்பட்டு, கொலை செய்யப்பட்டிருக்கிறார். அந்தப் பெண் முசாகர் என்ற பட்டியல் சாதி பெண்ணாம். கொன்றவர்கள் உபி.முதல்வர் யோகியின் தாக்கூர் சமூகத்தைச் சேர்ந்தவர்கள்.

தாக்கூர் சாதி பிற்படுத்தப்பட்டவர்கள். உத்திரப்பிரதேசம் சென்றிருக்கிறீர்களா? நிலவுடமையின் கோர முகத்தை அங்கு காணலாம். அங்கு வீடுகளின் உயரத்தைக் கூட சாதிதான் தீர்மானிக்கிறது. தாக்கூரின் வீடு பார்ப்பானின் வீட்டை விட உயரம் குறைவாய் இருக்க வேண்டும், யாதவர்களின் வீடு தாக்கூர்களின் வீட்டை விட உயரம் குறைவாய் இருக்க வேண்டும், தலித்துகளின் வீடுகள் யாதவர்களின் வீடுகளை விட உயரம் குறைவாய் இருக்க வேண்டும், முசாகர்களின் வீடுகள் தலித்துகளின் வீடுகளை விட உயரம் குறைவாய் இருக்க வேண்டும்.

Are the castes of the woman who died for rape so cruel ..?

முசாகர்கள் வயலில் இருக்கும் எலியை பிடித்து உணவாக உண்பார்கள். எலியைத் திண்பதால் அவர்களது வீடுகளும் எலி நுழைவதைப் போலவே இருக்க வேண்டும் என்பது இன்றைய தேதி வரை அங்கு நீடிக்கும் ஏற்பாடு. கதவுகளும் அவ்வாறே அமைக்கப்பட்டிருக்க வேண்டும் என்பதால், முசாகர்களின் வீட்டுக்குள் நுழைவது என்பது எலி வலைக்குள் நுழைவது போலத்தானிருக்கும்.

இந்த மக்கள் தான் சாதிக் கொடுமையால் ஊர்களை விட்டு ஓடி, குடும்பம் குடும்பமாக டெல்லி, நொய்டா போன்ற இடங்களில் பிளாட்பார வாழ்க்கை நடத்துபவர்கள். குடியிருப்புகள் அமைந்திருக்கும் திசைகூட காற்றின் திசைக்கு ஏற்ப தான் இருக்க வேண்டும். தலித்துகளின் குடியிருப்பைக் கடந்து மேல்சாதியினரின் குடியிருப்புக்குக் காற்று கூட செல்லக் கூடாது. ஓலைக் குடிசையாய் இருந்த வீட்டை ஒரு முசாகர் காரை வீடாக கட்டியதற்காக,Are the castes of the woman who died for rape so cruel ..?

ஒரு முசாகர் காரை வீடாக கட்டியதற்காக சமீபத்தில் அதை இடித்துத் தள்ளிய செய்தி வந்தது. தமிழகத்தில் பெரியார் என்ன செய்தார் என்பதை இதிலிருந்து பொருத்திப் பார்க்கலாம். படத்தில் இருப்பது தான் முசாகர் வீடுகள் எப்போதோ இருந்ததல்ல... இப்போது இருப்பது.
 

Follow Us:
Download App:
  • android
  • ios