நாங்கள் வெளியிட்டுள்ள இந்த அறிக்கையை 'தி.மு.க  காப்பி அடிக்கக்கூடாது என்று பா.ம.க-வின் இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.

நடக்கவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக - பாஜக கூட்டணியில் பாமகவுக்கு 7 தொகுதிகளும்,  பாஜகவுக்கும் 5 தொகுதிகளும் தேஉத்திக விற்கு 4 தொகுதிகளும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. இதர கட்சிகளுக்கு தலா 1  தொகுதிகளும் ஒதுக்கியுள்ளது.

இந்நிலையில், மாநிலங்களின் உரிமைகளே மத்திய அரசின் பெருமை என்ற கோரிக்கையுடன் தமது தேர்தல் அறிக்கையை பாமக வெளியிட்டுள்ளது. சென்னை தியாகராய நகரில் உள்ள தனியார் ஹோட்டலில் தேர்தல் அறிக்கையை, பா.ம.கவின் நிறுவனர் ராமதாஸ் வெளியிட பெண் செய்தியாளர் ஒருவர் பெற்றுக்கொண்டார்.

இந்த அறிக்கை வெளியிட்ட பின் பேசிய அன்புமணி; நாங்கள் வெளியிட்டுள்ள இந்த அறிக்கையில் தன்னாட்சி அதிகாரம் பெற்ற தமிழகம் படைப்போம்! எனபதை முன்பைத்தே அறிக்கை வெளியிட்டுள்ளோம்.  இந்த அறிக்கையில் இளையராஜாவுக்கு பாரத ரத்னா விருது, நதிகள் இணைப்பு, ஏழு தமிழர் விடுதலை, ஈழத் தமிழருக்குத் தனி நாடு அமைக்க பொது வாக்கெடுப்பு, மீனவர் நல அமைச்சகம், கச்சத்தீவு மீட்பு, புதுவைக்கு மாநிலத் தகுதி, பெண்களுக்கு 33 சதவிகித இடஒதிக்கீடு''  என பல்வேறு அம்சங்கள்  கூறியுள்ளோம்.

மேலும், தமிழ்நாட்டின் உரிமைகள் மீட்டெடுக்கப்பட வேண்டும், தமிழ்நாட்டு மக்களின் நலன் காக்கப்படும். இதை மனதில் வைத்தே இந்தத் தேர்தல் அறிக்கைத் தயாரித்துள்ளோம், எங்கள் தேர்தல் அறிக்கையை பார்த்து தி.மு.க அப்படியே காப்பி அடிக்கக்கூடாது என்று தெரிவித்தார்.