நேற்று காலை அந்த இளம்பெண் கடற்கரை சாலைக்கு சென்று கடல் அழகை ரசித்துக்கொண்டு இருந்தார்.
கர்நாடகா மாநிலம் பெங்களூரூ நகரை சேர்ந்தவர் 28 வயது இளம்பெண். இவர் கடந்த 7ம் தேதி தனது தோழிகளுடன் புதுச்சேரிக்கு சுற்றுலா வந்துள்ளார். அவர்கள் தனியார் விடுதியில் அறை எடுத்து தங்கி இருந்தனர். இந்த நிலையில் நேற்று காலை அந்த இளம்பெண் கடற்கரை சாலைக்கு சென்று கடல் அழகை ரசித்துக்கொண்டு இருந்தார்.

மேலும் செய்திகளுக்கு.. சசிகலாவுடன் இணையும் திவாகரன்..12ம் கட்சி இணைக்கும் விழா - குழப்பத்தில் அதிமுக தொண்டர்கள்!
அப்போது அங்கு வந்த முதியவர் ஒருவர் சிறிது நேரம் நோட்டமிட்டு பார்த்துவிட்டு, அந்த இளம் பெண்ணின் கையை பிடித்து இழுத்து மானபங்கம் செய்ய முயற்சித்ததாக கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சியடைந்த அந்த பெண்மணி கூச்சலிட்டார். இதனை கேட்ட பலர் திரண்டு வந்தனர். இதை பார்த்த முதியவர் அங்கிருந்து தப்பி ஓடி விட்டார்.
இது பற்றி தகவல் அறிந்த ஒதியஞ்சாலை சப் - இன்ஸ்பெக்டர் முருகன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். பின்னர் அந்த பெண்ணை போலீஸ் ஜீப்பில் ஏற்றிக்கொண்டு அந்த பகுதியில் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது கடற்கரை சாலையில் பதுங்கி இருந்த அந்த முதியவரை பிடித்து விசாரணை நடத்தினர்.
மேலும் செய்திகளுக்கு.. அடுத்த பிளான் ரெடி.. தமிழ்நாடு முழுவதும் சுற்றுப்பயணம் செல்கிறார் கமல்ஹாசன்.! எதற்கு தெரியுமா?

விசாரணையில் அவர் கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவிலை சேர்ந்த மூர்த்தி (வயது 59) என்பதும், தெருவில் பேப்பர் பொறுக்கி விற்பனை செய்து பிளாட்பாரத்தில் வசிப்பவர் என்பதும் தெரியவந்தது. இதனை தொடர்ந்து போலீசார் அவரை கைது செய்து, நீதிபதி முன்னிலையில் ஆஜர்படுத்தி காலாப்பட்டு மத்திய சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மேலும் செய்திகளுக்கு.. ஓ.பன்னீர்செல்வத்துக்கு நாங்க உதவி செஞ்சிருப்போம்.. அமைச்சர் மா.சுப்பிரமணியன் சொன்ன சீக்ரெட்
