டெல்லியில் பயங்கரம்.. அமேசான் மேனேஜர் 5 பேர் கொண்ட கும்பலால் சுட்டுக்கொலை.!
டெல்லியில் அமேசான் நிறுவனத்தில் சீனியர் மேனேஜராக வேலை பார்த்து வந்தவர் ஹர்ப்ரீத் கில் (36). இவர் தனது நண்பர் கோவிந்த் சிங் என்பவருடன் இருசக்கர வாகனத்தில் சென்றுக்கொண்டிருந்தார்.
டெல்லியில் அமேசான் நிறுவனத்தின் சீனியர் மேனேஜர் மர்ம கும்பலால் துப்பாக்கியால் சுட்டு கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
டெல்லியில் அமேசான் நிறுவனத்தில் சீனியர் மேனேஜராக வேலை பார்த்து வந்தவர் ஹர்ப்ரீத் கில் (36). இவர் தனது நண்பர் கோவிந்த் சிங் என்பவருடன் இருசக்கர வாகனத்தில் சென்றுக்கொண்டிருந்தார். வடகிழக்கு டெல்லியின் பஜன்புராவின் சுபாஷ் விஹார் பகுதியில் சென்றுக்கொண்டிருந்த போது இருசக்கர வாகனத்தில் வந்த 5 பேர் கொண்ட வழிமறித்து திடீரென ஹர்ப்ரீத் கில் மீது துப்பாக்கிச்சூடு நடத்தி விட்டு அந்த கும்பல் அங்கிருந்து தப்பித்தது.
இதையும் படிங்க;- பக்கவாக ஸ்கெட்ச் போட்டு கணவரை போட்டு தள்ளிவிட்டு நாடமாடிய மனைவி.. சிக்கியது எப்படி? பரபரப்பு தகவல்!
இதில் ஹர்ப்ரீத் தலையில் குண்டு பாய்ந்து ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிக்கொண்டிருந்தார். உடனே அவரை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக கூறியுள்ளனர். அவரது நண்பர் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
இதையும் படிங்க;- என் புருஷன் உயிரோடு இருக்கிற வரைக்கும் நாம ஒன்னு சேர முடியாது.. உல்லாசத்துக்கு ஆசைப்பட்டு மனைவி செய்த பகீர்.!
இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து வருகின்றனர். அமேசான் நிறுவனத்தின் சீனியர் மேனேஜர் துப்பாக்கியால் சுட்டுக்கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும், பதற்றதையும் ஏற்படுத்தியுள்ளது.