பயங்கரம்.. தூங்கிக்கொண்டிருந்த அதிமுக பிரமுகர் தலையில் கல்லைப்போட்டு கொடூரமாக கொலை.!
திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூரை அடுத்த வல்லூர் கிராமத்தை சேர்ந்தவர் பஞ்சநாதன் (57). இவர் அதிமுகவில் 3-வது வார்டு கிளை செயலாளராகவும் மற்றும் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வந்தார்.
மீஞ்சூர் அருகே தூங்கிக்கொண்டிருந்த அதிமுக பிரமுகர் தலையில் கல்லைப்போட்டு கொடூரமாக கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூரை அடுத்த வல்லூர் கிராமத்தை சேர்ந்தவர் பஞ்சநாதன் (57). இவர் அதிமுகவில் 3-வது வார்டு கிளை செயலாளராகவும் மற்றும் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வந்தார். இவருக்கு பானுமதி என்ற மனைவியும், மணிகண்டன் என்ற மகனும், ஜெயந்தி என்ற மகளும் உள்ளனர். இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு புதிய கட்டியுள்ள கடையின் முன்பு பஞ்சநாதன் படுத்து தூங்கி கொண்டிருந்தார். மறுநாள் காலையில் ரத்த வெள்ளத்தில் பஞ்சநாதன் கொலை செய்யப்பட்டு கிடந்தார். இதுதொடர்பாக உடனே போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் பஞ்சநாதன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதையும் படிங்க;- துப்பட்டா போடாத பெண்களைப் பார்த்தாலே இப்படி செய்யணும் போல தோணுது! இதுவரை 100 பேர்! சென்னை இளைஞர் பகீர்.!
இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில் பஞ்சநாதன் தலையில் கல்லைப்போட்டு கொலை செய்தது தெரியவந்துள்ளது. மேலும், அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர்.
இதையும் படிங்க;- நான் யாரு என் பேக்ரவுண்ட் என்ன தெரியுமா? பெண் போலீஸ் மீது தாக்குதல்! சசிகலா புஷ்பாவின் மகன் சென்னையில் கைது.!
கடந்த மாதம் பஞ்சநாதன் இந்தியன் ஆயில் நிறுவனத்துக்கு வேலைக்கு சென்றுவிட்டு இருசக்கர வாகனதத்தில் வீடு திரும்பிக்கொண்டிருந்த போது அவரை வழிமறித்த மர்மகும்பல் கத்தியால் வெட்டியதில் அதிஷ்டவசமாக உயிர் பிழைத்த நிலையில் தற்போது தூக்கிக்கொண்டிருந்த போது தலையில் கல்லைப்போட்டு கொலை செய்துள்ளனர்.