16 வயது சிறுமியை கொலை செய்த விவகாரம்… தலைமறைவாக இருந்த குற்றவாளியை பிடித்த போலீஸ்!!
டெல்லியில் 16 வயது சிறுமியை கொலை செய்த நபர் தலைமறைவாக இருந்த நிலையில் போலீஸார் அவரை கைது செய்துள்ளனர்.
டெல்லியில் 16 வயது சிறுமியை கொலை செய்த நபர் தலைமறைவாக இருந்த நிலையில் போலீஸார் அவரை கைது செய்துள்ளனர். டெல்லியில் 16 வயது சிறுமியை ஒரு இளைஞன் பின்தொடர்ந்து சென்று கத்தியால் குத்தி கொடூரமாக கொலை செய்துள்ளார். இந்த சம்பவம் அங்கிருந்த சிசிடிவி கேமிராவில் பாதிவாகியிருந்தது. இதனை தொடர்ந்து, சிசிடிவி காட்சிகளை வைத்து போலீசார் விசாரணை நடத்தினர்.
இதையும் படிங்க: சிறுமியை இழுத்து போட்டு ஆட்டோவில் வைத்து பாலியல் தொல்லை.. 60 வயது கிழவனை வீடு புகுந்து தூக்கிய போலீஸ்.!
அதில், அந்த சிறுமியின் பெயர் நிக்கி என்றும் அந்த இளைஞன் ஷாஹில் என்றும் தெரியவந்தது. மேலும், அவர்கள் இருவருக்கும் இடையில் பழக்கம் ஏற்பட்டுள்ளது, பிறகு ஒரு நாளுக்கு முன்பு இருவருக்கும் இடையில் சண்டை ஏற்பட்டுள்ளது. அதன்பின்னர், ஷாஹிலின் நண்பரின் குழந்தைக்கு பிறந்தநாள் விழா நடந்தது.
இதையும் படிங்க: டெல்லியில் சிறுமியை கொடூரமாகக் கொன்ற இளைஞர்! வெறித்தனமான தாக்குதலை வேடிக்கை பார்த்த மக்கள்!
அதில், கலந்துகொள்வதற்காக நிக்கி செல்லும் வழியில் அவரை வழிமறித்து கொலை செய்துவிட்டு தலைமறைவானதும் தெரியவந்தது. இதனிடையே அந்த சிறுமியின் தந்தை அளித்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீஸார் தலைமறைவான ஷாஹிலினை தேடி கண்டுப்பிடித்து கைது செய்துள்ளனர்.