சிறையில் சக கைதிகள் என்ன சொல்கிறார்கள் ? மன அழுத்தத்தில் புழுங்கித் தவிக்கும் அபிராமி !!

https://static.asianetnews.com/images/authors/7c75b3b3-3057-52ee-ad74-0f9554f16f46.jpg
First Published 11, Oct 2018, 7:58 PM IST
abirami in chennai puzhal prison
Highlights

புழல் சிறையில் குன்றத்தூர் அபிராமியைப் பார்த்தால் சக பெண் கைதிகள் தெறித்து ஓடிவிடுவதாகவும், யாருமே அவருடன் பேசுவதில்லை என்றும் கூறப்படுகிறது. அபிராமி மன அழுத்தித்தில் தவித்து வருவதாகவும், எப்போதுமே அழுது கொண்டே இருப்பதால் கவுன்சீலிங் கொடுக்க சிறைத்துறை திட்டமிட்டுள்ளதாகவுத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

சென்னை அருகே உள்ள குன்றுத்தூர் மூன்றாம் கட்டளை பகுதியை சேர்ந்தவர் விஜய். தனியார் வங்கியில் முக்கிய பொறுப்பில் பணியாற்றி வரும் இவரது மனைவி  அபிராமி .இவர்களுக்கு  அஜய் என்ற மகனும், கார்னிகா என்ற பெண் குழந்தையும் இருந்தனர். 

அபிராமிக்கும் பிரியாணிக் கடையில் வேலை பார்க்கும் சுந்தரம் என்பவருடன் ஏற்பட்ட கள்ளக்காதலால், இரண்டு குழந்தைகளையும் பாலில் விஷம்  கலந்து கொடுத்தும், மூச்சை நிறுத்தியும் கொலை செய்தார். இதைத் தொடர்ந்து கள்ளக்காதலுடன் தப்ப முயன்ற அவரை போலீசார் கைது செய்து புழல் சிறையில் அடைத்துள்ளனர். அவரது கள்ளக் காதலனும் சென்னை  புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில் அபிராமி புழல் சிறை வளாகத்திற்குள் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டதாக தகவல்கள் வெளிவந்தன. ஆனால் சிறை நிர்வாகம் இதை மறுத்துள்ளது.

இந்நிலையில், புழல் சிறையில் குன்றத்தூர் அபிராமியைப் பார்த்தால் சக பெண் கைதிகள் தெறித்து ஓடிவிடுவதாகவும், யாருமே அவருடன் பேசுவதில்லை என்றும் கூறப்படுகிறது. இதனால் அபிராமி மன அழுத்தித்தில் தவித்து வருவதாகவும், எப்போதுமே அழுது கொண்டே இருப்பதால் கவுன்சீலிங் கொடுக்க சிறைத்துறை திட்டமிட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

loader