சென்னையில் மீன் வாங்குவது போல் வந்து அமமுக நிர்வாகி போட்டு தள்ளிய கும்பல்.. என்ன காரணம் தெரியுமா?
சென்னை நொளம்பூர் அடுத்த ரெட்டிபாளையத்தில் ஜெகன் என்பவர் மீன்கடை நடத்தி வந்துள்ளார். நேற்று இரவு ஜெகன் கடையில் இருந்தபோது மீன் வாங்குவது போல் வந்த 5 பேர் கொண்ட கும்பல் அவரை சரமாரியாக வெட்டி கொலை செய்துவிட்டு அங்கிருந்து தப்பித்தனர்.
சென்னையில் அமமுக பிரமுகரை மர்ம நபர்கள் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த கொலை சம்பவம் தொடர்பாக குற்றவாளியை போலீசார் தேடி வருகின்றனர்.
சென்னை நொளம்பூர் அடுத்த ரெட்டிபாளையத்தில் ஜெகன் என்பவர் மீன்கடை நடத்தி வந்துள்ளார். நேற்று இரவு ஜெகன் கடையில் இருந்தபோது மீன் வாங்குவது போல் வந்த 5 பேர் கொண்ட கும்பல் அவரை சரமாரியாக வெட்டி கொலை செய்துவிட்டு அங்கிருந்து தப்பித்தனர். மக்கள் நடமாட்டம் அதிகமுள்ள பகுதியில் கொலை நடைபெற்றதை அடுத்த மக்கள் அலறியடித்துக்கொண்டு ஓடினர். இந்த சம்பவம் தொடர்பாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் ஜெகன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதையும் படிங்க;- தமிழகத்தை அலறவிட்ட பல்லடம் கொலை வழக்கில் திடீர் திருப்பம்.. வேறு வழியில்லாமல் முக்கிய குற்றவாளி செய்த காரியம்
பின்னர் கொலை சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியதில் பல்வேறு அதிர்ச்சி தகவல் வெளியானது. திருவாரூர் முத்துப்பேட்டை பகுதியை சேர்ந்தவர் ஜெகன் (48). 2021ம் ஆண்டு அதிமுக ஒன்றிய கவுன்சிலர் ராஜேஷ் தலை துண்டித்து கொடூரமாக கொலை செய்யப்பட்டார். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தியதில் அமமுக பிரமுகரான ஜெகன் தனது கூட்டாளிகளுடன் சேர்ந்து கூலிப்படையுடன் ராஜேஷை கொலை செய்தது தெரியவந்தது.
இதையும் படிங்க;- சினிமா பாணியில் நடந்த பயங்கரம்.. ஆட்டோ மீது மோதி.. நாட்டு வெடிகுண்டு வீசி ரவுடி ஓட ஓட விரட்டி படுகொலை!
கொலை வழக்கில் கைதாகி சிறைக்கு சென்ற ஜெகன் பின்னர் ஜாமீனில் வெளியே வந்தார். சொந்த ஊரில் இருந்தால் தன்னுடை உயிருக்கு ஆபத்து என்பதால் யாருக்கும் தெரியாமல் குடும்பத்துடன் சென்னை நொளம்பூரில் தலைமறைவாக வாழ்ந்து வந்தது தெரியவந்துள்ளது. அதிமுக ஒன்றிய கவுன்சிலர் ராஜேஷ் கொலைக்கு பழி வாங்கும் விதமாக அவரது கூட்டாளிகள் இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு ஜெகனை வெட்டி கொலை செய்தது தெரியவந்தது.