Asianet News TamilAsianet News Tamil

திருமணம் ஆனதை மறைத்து இளம் பெண்ணுடன் லிவிங் டுகெதர்..இஸ்டத்துக்கு உல்லாசம். இறுதியில் நடந்த பயங்கரம்.

இளைஞர் ஒருவருடன் லிவிங் டுகெதர் வாழ்க்கை வாழ்ந்து வந்த பெண் திடீரென தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் நடந்துள்ளது. தனது பார்ட்னர் ஏற்கனவே  திருமணமானவர் என்று தெரிந்த நிலையில் அந்தப் பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

 

A young woman who was involved in Living Together's life hanged herself... Tragedy in Uttar Pradesh
Author
Uttar Pradesh, First Published Aug 5, 2022, 7:04 PM IST

இளைஞர் ஒருவருடன் லிவிங் டுகெதர் வாழ்க்கை வாழ்ந்து வந்த பெண் திடீரென தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் நடந்துள்ளது. தனது பார்ட்னர் ஏற்கனவே  திருமணமானவர் என்று தெரிந்த நிலையில் அந்தப் பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இளம்பெண் தங்கியிருந்த  வீட்டிற்கு அவரது சகோதரி வந்த போதே தற்கொலை சம்பவம் வெளிச்சத்திற்கு வந்தது.

திருமணத்தின் மீது நம்பிக்கை இல்லாத பல இளைஞர்கள் அவர்களுக்கு பிடித்தவர்களுடன் தாலி கட்டாமலேயே, பதிவுத் திருமணம் செய்து கொள்ளாமலேயே வாழும் முறை தான் லிவிங் டுகதர். ஒருவர் மீது ஒருவர் வைத்திருக்கிற பரஸ்பர நம்பிக்கை மூலமே வாழ வேண்டும் என்பதும், காதல் மீது இல்லாத நம்பிக்கை தாலிக்கொடி மீது எதற்கு என்பதுதான் லிவிங் டுகெதர் ஆதரவாளர்களின் கேள்வியாக உள்ளது. இப்படி லிவிங் டுகெதர் வாழ்க்கையில் ஈடுபடும் பலரின் வாழ்க்கை சில நேரங்களில் சோகத்தில் முடிவதையும் பார்க்க முடிகிறது.

A young woman who was involved in Living Together's life hanged herself... Tragedy in Uttar Pradesh

திடீரென அவர்கள் உறவில் ஏற்படும் விரிசல், ஏமாற்றம், முறிவு போன்றவற்றை தாங்கிக்கொள்ள முடியாதவர்கள் தங்கள் வாழ்க்கையையே முடித்துக் கொள்ளும் நிலைமைக்கு தள்ளப்பட்டு விடுகின்றனர் என்பதுதான் சோகம், இதுபோன்ற ஒரு சம்பவம் உத்தர பிரதேச மாநிலம் காசியாபாத்தில் நடந்துள்ளது. தனது லிவிங் டுகெதர் பார்ட்னர் ஏற்கனவே திருமணம் ஆனவர் என்ற உண்மை அந்தப் பெண்ணுக்கு தெரியவந்த நிலையில்ர அப்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். முழு விவரம் பின்வருமாறு:-

இதையும் படியுங்கள்:  வேலை வாங்கி தர்றேனு கூட்டிட்டுபோய் ஓட்டலில் வச்சி என்னை நாசம் பண்ணிட்டான் அக்கா.. குலுங்கி குலுங்கி அழுத தங்கை

உத்தரபிரதேச மாநிலம் காசியாபாத்தில் உள்ள ஆதித்யா வேர்ல்ட் சிட்டி அடுக்குமாடி குடியிருப்பில் முசாஃபர்  நகரைச் சேர்ந்த இளம்பெண்ணும் அதே நகரைச் சார்ந்த இளைஞர் ஒருவரும் லிவிங் டுகதர் வாழ்க்கையில் ஈடுபட்டு வந்தனர். அவர்கள் இருவரும் நொய்டாவில் உள்ள பன்னாட்டு நிறுவனத்தில் வேலை செய்து வந்தனர், மாதம் கை நிறைய சம்பளம் நினைத்த நேரத்தில் உல்லாசம் என வாழ்க்கை இனிமையாகவே சென்றது. ஆனால் கடந்த சில தினங்களாக லிவிங் டுகதர் பார்ட்னர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டது. இதனால் இளம் பெண் கடும் மன உளைச்சலுக்கு இருந்து வந்தார்.

A young woman who was involved in Living Together's life hanged herself... Tragedy in Uttar Pradesh

தனது லிவிங் பார்ட்னர், உயிருக்குயிராய் காதலிக்கும் காதலன் ஏற்கனவே திருமணம் ஆனவர் என்ற உண்மை அந்தப் பெண்ணுக்கு தெரிய வந்ததுதான் அந்த பிரச்சனைக்கு காரணம். இதனால் தனது பார்ட்னருடன் அந்தப் பெண் தகராறில் ஈடுபட்டு வந்தார். ஏற்கனவே திருமணமானதை ஏன் என்னிடம் மறைத்தாய் என அந்தப் பெண் கேட்டு அந்த இளைஞரிடம் இயலாமையில் கதறினார். ஆனால் அந்த இளைஞன் அதற்கு பதில் ஏதும் கூறாமல் வீட்டைவிட்டு வெளியேறிவிட்டார். அதற்குப் பிறகு அவர் வீட்டிற்கு திரும்பிவரவேயில்லை, அந்த வீட்டில் தனியாக இருந்த அந்த இளம்பெண் ஒரு கட்டத்தில்  மனமுடைந்து, மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதையும் படியுங்கள்: கணவன் இல்லாத நேரத்தில் மனைவியை மிரட்டி உல்லாசம்.. கயவாளித்தனம் செய்த போலீசை கொத்துக்கறி போட்டு புருஷன்.

இந்நிலையில் அந்தப் பெண்ணின் சகோதரி தனது சகோதரியை தேடி அக்குடியிருப்புக்கு வந்த போது தன் சகோதரி தூக்கில் தொங்குவதை கண்டு அதிரிச்சியடைந்தார். பின்னர் காவல்துறைக்கு தகவல் கொடுத்தார். பின்னர் அங்கு வந்த போலீசார் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சந்தேகத்திற்கிடமான மரணம் என வழக்கு பதிவு செய்து லிவிங் பார்ட்னரை வலைவீசி  தேடி வருகின்றனர்.
 

Follow Us:
Download App:
  • android
  • ios