தஞ்சாவூரை சேர்ந்த சித்தார்த் எனும் மாணவன் பெங்களூரில் உள்ள பொறியியல் கல்லூரி ஒன்றில் படித்து வருகிறார். படிப்பதற்காக பெங்களூர் சென்ற சித்தார்த் அங்கு வைத்து செய்திருக்கும் காரியம் அப்பகுதி மக்களை கடும் அதிர்ச்சியில் ஆழ்த்தி இருக்கிறது. தன்னுடன் படிக்கும் மாணவிகள் சிலர் குளிக்கும் போது வீடியோ எடுத்து அவற்றை  பேஸ்புக்கில் பதிவிட்டிருக்கிறார் சித்தார்த்.

சித்தார்த் படிக்கும் கல்லூரியில் ஹாஸ்டலில் படிக்கும் பெண்களின் வீடியோ தான் இவ்வாறு இணையத்தில் வெளியாகி இருக்கிறது. ஒவ்வொரு மாணவியின் வீடியோவையும் முகநூலுல் போலி ஐடி மூலம் வெளியிடும் சித்தார்த், அந்த வீடியோவை சம்பந்தப்பட்ட மாணவியின் முகநூல் பக்கத்தில் கமெண்டுகளில் பதிவிட்டிருக்கிறார். 

இதனால் அதிர்ச்சி அடைந்த மாணவி ஒருவர் பெங்களூர் போலீசில் புகார் கொடுத்திருக்கிறார்.
அவர்களும் சம்பந்தப்பட்ட மாணவியின் வீடியோவை இணையத்தில் இருந்து அகற்றி இருக்கின்றனர். ஆனால் இதே போன்ற சம்பவங்கள் மீண்டும் தொடர்ந்திருக்கிறது. ஹாஸ்டலில் தன் மகளை பார்க்க வந்திருந்த, அம்மா ஒருவர் சில நாட்கள் தன் மகளுடன் தங்கி இருக்கிறார். அவரின் குளியலறை வீடியோவும் இணையத்தில் வெளியாகி இருக்கிறது. 

இதனால் அதிர்ச்சி அடைந்த மாணவி மீண்டும் போலீசில் புகார் தெரிவித்திருக்கிறார். அப்போது தான் எல்லா வீடியோவுமே ஹாஸ்டலில் எடுக்கப்பட்ட விவரம் தெரியவந்திருக்கிறது. ஹாஸ்டலில் புகுந்து வீடியோ எடுக்க வேண்டும் என்றால் அது எப்படி? இதை செய்தது யார் என்ற கோணத்தில் விசாரணையை தொடங்கி இருக்கின்றனர் போலீசார்.

அப்போது தான் இதில் சில வீடியோக்கள் தஞ்சாவூர் ஐபி முகவரியில் இருந்து பதிவானது தெரியவந்திருக்கிறது. தொடர்ந்து நடத்திய விசாரணையில் இதற்கெல்லாம் காரணம் சித்தார்த் என்பது தெரியவந்திருக்கிறது. 

மேலும் இந்த விஷயத்தில் சித்தார்த்துக்கு அதே கல்லூரியில், ஹாஸ்டலில் படிக்கும்  ஒரு பெண் தான் உதவி இருக்கிறார் எனும் அதிர்ச்சி தகவலும் தெரியவந்திருக்கிறது. சித்தார்த்தின் தோழியான அந்த பெண் கொஞ்சம் கூட மனசாட்சியே இல்லாமல் ,தன் உடன் படிக்கும் மாணவியரின் குளியலறை வீடியோக்களை எடுத்து சித்தார்த்துக்கு அனுப்பி கொடுத்திருக்கிறார். 

இந்த வழக்கில் சித்தார்த்தை கைது செய்திருக்கும் போலீசார் இன்னும் அந்த பெண்ணை மட்டும் கைது செய்யவில்லை. தொடர்ந்து அந்த பெண்ணை தேடி வருகின்றனர். பெண்கள் தங்கி இருக்கும் ஹாஸ்டலில் பெண்களாலேயே இது போன்ற ஆபத்துக்கள் நேரும் என்பது, பெற்றோர்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தி இருக்கிறது.