Asianet News TamilAsianet News Tamil

பெற்றோரை உதறிவிட்டு கார் டிரைவருடன் ஓடிய சாப்ட்வேர் இன்ஜினியர் நேர்ந்த கதி... நடு வீட்டில் தற்கொலை.

கார் ஓட்டுனர் ஒருவர் சாப்ட்வேர் இன்ஜினியர் பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டதுடன் அந்தப் பெண்ணை கொடுமை செய்து வந்ததில் அந்த பெண் தற்கொலை செய்துகொண்டுள்ளார். 

A software engineer hanged herself because she could not bear the cruelty of his husband's dowry in Karnataka.
Author
Karnataka, First Published Jul 18, 2022, 8:37 PM IST

கார் ஓட்டுனர் ஒருவர் சாப்ட்வேர் இன்ஜினியர் பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டதுடன் அந்தப் பெண்ணை கொடுமை செய்து வந்ததில் அந்த பெண் தற்கொலை செய்துகொண்டுள்ளார். இந்த துயரச் சம்பவம் கர்நாடக மாநிலத்தில் அரங்கேறியுள்ளது.

பெண்களுக்கு எதிரான கொடுமைகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதை தடுக்க காவல்துறையும் அரசும் எத்தனை நடவடிக்கை எடுத்தும் குற்றங்கள் குறைந்தபாடில்லை, காதலிப்பதாக நடித்து கற்பழித்து மோசடி செய்வது, காதலிக்க மறுக்கும் பெண்கள் முகத்தில் ஆசிட் வீசுவது, திருமணம் செய்துகொண்டு வரதட்சணை கேட்டு கொடுமை செய்வது, காதலித்து திருமணம் செய்து ச*** டார்ச்சரில் ஈடுபடுவது போன்ற எண்ணற்ற கொடுமைகளைப் பெண்கள் அனுபவித்து வருகின்றனர்.

A software engineer hanged herself because she could not bear the cruelty of his husband's dowry in Karnataka.

இந்த வாரிசுகள் சாப்ட்வேர் இன்ஜினியர் பெண்ணை இனிமையாக பேசி, காதல் வலையில் வீழ்த்தி அவரை திருமணம் செய்து கொண்டு அந்த பெண்ணை கணவன் தற்கொலைக்கு தூண்டியுள்ள கொடூரம் நடந்துள்ளது.

இதையும் படியுங்கள்: எங்க பொண்ணோட கையெழுத்து இல்லை.. ஸ்ரீமதி பெற்றோர்கள் சொன்ன அதிர்ச்சி தகவல் 

முழு விவரம் பின்வருமாறு:-  கர்நாடக மாநிலம் நெலமங்கள தாலுகா கால்கொண்டனஹல்லியைச்  சேர்ந்தவர் அனிதா ( 25) இவர் சாப்ட்வேர் என்ஜினியராக பணியாற்றி வந்தார், இந்நிலையில் இவரை அன்றாடம் கால் டாக்சி டிரைவர் ஒருவர் அலுவலகத்துக்கு அழைத்து சென்று அழைத்து வரும் வேலையை செய்து கொண்டிருந்தார். இந்நிலையில் கால் டாக்ஸி டிரைவர் தன்னை மிகவும் பொறுப்பான இளைஞனைப் போலவும், ஒழுக்கமானவர் என்பது போன்றும் காட்டிக் கொண்டார்.

இதையும் படியுங்கள்: அடத்தூ... பெட்ரூம் கதவை திறந்து பார்த்த மகளுக்கு பயங்கர அதிர்ச்சி... காதலனுடன் கண்றாவி கோலத்தில் தாய்...

இதில் அனிதாவுக்கு கால் டாக்ஸி டிரைவர் மீது ஈர்ப்பு ஏற்பட்டது. இருவரும் கடந்த சில மாதங்களாக காதலித்து வந்தனர். ஆனால் இவர்களின் காதலுக்கு அனிதாவின் பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்தனர், எனவே குடும்ப எதிர்ப்பை மீறி அனிதா அந்த டிரைவரை திருமணம் செய்து கொண்டார். கடந்த சில வருடங்களாக இருவரும் நல்ல முறையில் வாழ்ந்து வந்தனர், ஆனால் திடீரென அந்த கால்டாக்சி டிரைவர் தனது சுயரூபத்தைக் காட்டத் தொடங்கினார், அனிதாவை தாய் வீட்டுக்கு சென்று வரதட்சணை வாங்கி வருமாறு அடித்து துன்புறுத்தினார்,

A software engineer hanged herself because she could not bear the cruelty of his husband's dowry in Karnataka.

இந்நிலையில் பெற்றோர்களை எதிர்த்து திருமணம் செய்து வந்துவிட்ட நிலையில் மீண்டும் வீட்டிற்கு செல்ல முடியாது என அந்தப் பெண் கணவரிடம் கதறினார், ஆனால் கணவர் அதை கேட்டவே இல்லை, தொடர்ந்து  மனைவி அனிதாவை அடித்து உதைத்து வந்தார்.  இதனால் தன் தாய் வீட்டிற்கும் செல்ல முடியாமல் கணவனுடனும்  வாழ முடியாத நிலையில் மன உளைச்சலுக்கு தள்ளப்பட்டார். தனிமையில் இருக்க முடிவு செய்த அவர் விவாகரத்து கேட்டு நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார், 

இதற்கான வழக்கு நிலுவையில் இருந்து வருகிறது, வாழ்க்கையில் மிகப்பெரிய தவறு செய்து விட்டேனே என  மனம் வருந்தினார், இந்நிலையில் யாரும் அற்ற நிலையில் தனிமரமாகி விட்டோமே என்ற ஏக்கத்தில் இருந்த அவர் வாடகை வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து அப்பகுதி மக்கள் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் உடலை கைப்பற்ற மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்நிலையில் அந்த பெண்ணின் கால் டாக்ஸி கணவரும், அவரது தாயாரும் தலைமறைவாகியுள்ளனர். 
 

Follow Us:
Download App:
  • android
  • ios