காரை லாக் செய்யாமல் போன நபர்.. திரும்பி பார்த்தால் காருக்குள் சடலம் - சென்னை அருகே அடுத்தடுத்து அதிர்ச்சி
சென்னை வளசரவாக்கத்தில் சாலையில் நிறுத்தப்பட்டிருந்த காரில் சடலம் கிடந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
சென்னை, வளசரவாக்கம் பகுதியில் உள்ள கனகதாரா நகரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசிப்பவர் ஷேர் மார்க்கெட் வியாபாரியான டி.அரவிந்த். இவருக்கு வயது 42 ஆகிறது. இவர் கடந்த திங்கள்கிழமை காலை தனது காரை வீட்டின் அருகில் பார்க் செய்துவிட்டு லாக் செய்யாமல் சென்றுள்ளார்.
கடந்த புதன்கிழமை மீண்டும் காரை எடுக்க சென்ற அரவிந்த்க்கு அதிர்ச்சி காத்திருந்தது. லாக் செய்யாமல் இருந்த காரில் 50 வயது மதிக்கத்தக்க ஆண் பின்பக்க சீட்டில் படுத்துக்கொண்டிருந்தார். அவர் மீது மதுபோதையின் நாற்றமும் போதை பொருட்கள் பயன்படுத்திய பாக்கெட்டுகளும் அருகில் இருந்தது. இது தொடர்பாக காவல் துறை உதவி எண் 100 அழைத்து தகவல் சொல்லியிருக்கிறார் அரவிந்த்.
அப்போது, அவ்வழியாக ரோந்து போலீசார் அங்கு வரவே, அங்கிருந்த குடியிருப்பு வாசிகள் 108 ஆம்புலன்ஸுக்கு தகவல் அனுப்பி இருந்தனர். போலீசாரின் சோதனையில் காருக்குள் இருந்த ஆண் ஏற்கனவே இறந்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதன்பின்னர்,உடலை கைபற்றி பிரேத பரிசோதனைக்கான ராயப்பேட்டை மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.
போலீசாரின் முதற்கட்ட சோதனையில், அரவிந்த் கார் கதவை சரியாக லாக் செய்யாமல் சென்றுள்ளார். ஒருவேளை இதனை பயன்படுத்தி சில மர்மநபர்கள் ஏதாவது செய்து இருக்கலாம் என்றும் காவல்துறை சந்தேகிக்கின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இதையும் படிங்க..நடிகர் விஜய் அரசியலுக்கு வரக்கூடாதா.! புரட்சி தளபதியை வம்புக்கு இழுத்த செல்லூர் ராஜூ.!!
இதையும் படிங்க..கர்நாடகாவில் ஆட்சியை பிடிக்கப்போவது யார்? கருத்துக்கணிப்பில் வெளிவந்த அதிர்ச்சி தகவல் !!