கோவாவில் துணிக்கடை நடத்தி வருபவர் அப்துல்  ரசாக். இவர் தனது மனைவி மற்றும் 17 வயது மகளுடன் வசித்து வந்தார். இவரது வியாபாரத்துக்கு உதவியாக இருந்தவர் இவருடை தம்பி முகமது ரபீக். 31 வயதான இவருக்கு திருமண்மட ஆகவில்லை.

இவர் தனது அண்ணன் அப்துல் ரசாக் வீட்டிலேயே தங்கிருந்தார். இந்நிலையில் முகமது ரபீக் தனது அண்ணன் மகளுடன் நெருங்கிப் பழகியுள்ளார். மேலும் அவருக்கு தொடர்ந்து ஆகை வார்த்தைகள் பேசியுள்ளார்.

ஒரு கட்டத்தில் வீட்டில் யாரும் இல்லாதபோது ரபீக் அந்த சிறுமியை வலுக்கட்டாயமாக கற்பழித்துள்ளார். அதன் பின்னர் ரபீக் வாய்ப்பு கிட்க்கும் போதெல்லாம்  பலமுறை அந்தச் சிறுமியுடன் அதுபோல நடந்துகொண்டார்.

இந்நிலையில் அந்த 17 வயது சிறுமி  கருவுற்றாள். அவள் கருவுற்றது தெரிய வந்ததை அடுத்து அவன் சிறுமியுடனான தொடர்பைத் துண்டித்தான். இந்நிலையில் சிறுமி கருவுற்றது அவளது குடும்பத்தினருக்கும் தெரிய வந்ததை அடுத்து அது குறித்து விசாரித்தறிந்த அவர்கள் முகமது ரஃபீக் மீது காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

இதையடுத்து நேற்று முன்தினம் புகார் அளிக்கப்பட்ட 2 மணி நேரத்தில் முகமது ரஃபீக்கை கைது செய்த போலீசார், போக்சோ உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி போலீஸ் காவலில் எடுத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.