உறுதியான பாம்பன் பாலத்திலிருந்து குதித்த உறுதியான கள்ளக்காதல் ஜோடி..! 

பாம்பன் பாலத்தில் இருந்து குதித்து தற்கொலைக்கு முயன்ற கள்ளக்காதலர்களை மீனவர்கள் உயிருடன் மீட்ட விவகாரம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மதுரையை சேர்ந்த வெங்கடேசன் என்பவர் அவனியாபுரம் பகுதியில் வசித்து வந்த அவருடைய நண்பர் கார்த்திக் பாபுவின் மனைவி திவ்யா என்பவருடன் கள்ளக்காதலில் இருந்துள்ளார்.இந்த நிலையில் வெங்கடேஷும், கார்த்திக் மனைவி திவ்யாவும் வீட்டிற்கு தெரியாமல் பழகி வந்துள்ளனர்.

கார்த்திக் பாபுவிற்கு திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளது. அதே போன்று வெங்கடேஷும் திருமணம் ஆகி இரண்டு குழந்தைகள் உள்ளது. இந்நிலையில் இவர்கள் இருவரும் வீட்டிற்கு தெரியாமல் பழகி வந்துள்ளனர். ஒரு கட்டத்தில் கடந்த 27ஆம் தேதி வெங்கடேஷ் மற்றும் திவ்யா யாருக்கும் தெரியாமல் வீட்டில் இருந்து வெளியேறி ஒகேனக்கல் சேலம் திண்டுக்கல் உள்ளிட்ட பல பகுதிகளுக்கு சென்று மகிழ்ச்சியாக இருந்துள்ளனர். பின்னர் கடைசியாக ராமேஸ்வரம் வந்த இந்த ஜோடி அங்கு உள்ள ஒரு விடுதியில் அறை எடுத்து தங்கி பல இடங்களுக்கு சென்று சுற்றிப் பார்த்து வந்துள்ளனர்.

பின்னர் மீண்டும் வீட்டிற்கு சென்றால் பிரச்சினை ஏற்படும் என்பதால் இருவரும் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்து பாம்பன் பாலத்தை நடுப்பகுதியில் நின்றுள்ளனர். முதலில் வெங்கடேஷ் கைப்பிடி சுவரில் ஏறி நின்று கடலில் குதித்துள்ளார். ஆனால் திவ்யா கடலில் குதிக்காமல் வெங்கடேஷை காப்பாற்றுமாறு அருகிலிருந்த மீனவர்களிடம் சொல்ல ஓடோடி வந்த மீனவர்கள் கடற் கரையில் நின்றிருந்த படகை எடுத்துக்கொண்டு உயிருக்கு போராடிய வெங்கடேசை மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர். இதுகுறித்த தகவல் போலீசாருக்கு தெரியப்படுத்தவே தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.