தேனியில் நேருக்கு நேர் பைக் மோதி விபத்து...! ராணுவ வீரர் உள்ளிட்ட 3 பேர் துடி துடித்து பலி
தேனி மாவட்டம் கூடலூர் அருகே அதிவேகமாக வந்த இரண்டு பைக்குகள் நேருக்கு நேர் மோதிக்கொண்டதில் ராணுவ வீர்ர் உள்ளிட்ட 3 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர்.
இரண்டு பைக் மோதி விபத்து
தேனி மாவட்டம் லோயர்கேம்ப் பகுதியில் தங்கி வேலை செய்து வருபவர் நாமக்கல்லை சேர்ந்த ராஜேஸ்குமார் இவர் நேற்று மாலை பணி முடிந்து வீடு திரும்பிக்கொண்டிருந்துள்ளார். அப்போது கூடலூர் பகுதியை சேர்ந்த லியோ செம்மன் (23) தர்மராஜ்(26) கம்பம் பகுதியில் இருந்து வீட்டிற்கு திரும்பிகொண்டிருந்துள்னர். அப்போது எதிரே வந்த ராஜேஸ்குமாரின் இரண்டு சக்கர வாகனமும், ராணுவவீரர் தர்மராஜ் வந்த இரு சக்கர வாகனமும் தேனி மாவட்டம் கூடலூரில் இருந்து குமுளி செல்லும் வழியில் அப்பாச்சி பண்ணை என்னும் இடத்தில் நேருக்கு நேர் மோதிக்கொண்டுள்ளது. அதிவேகமாக வந்த காரணத்தால் 3 பேரும் சாலையில் தூக்கி வீசப்பட்டுள்ளனர்.
செல்போனை தலைமாட்டில் வைத்து தூங்கிய போது பயங்கரம்.. வெடித்து சிதறியதில் பெண் ரத்த வெள்ளத்தில் பலி.
3 பேர் துடிதுடித்து பலி
3 பேருக்கும் தலையில் பலத்த காயம் அடைந்த காரணத்தால் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பலியானார்கள். சம்பவத்தை பார்த்த அருகிலிருந்தவர்கள் கூடலூர் வடக்கு காவல் நிலைய போலிசாருக்கு தகவல் அளித்த நிலையில் விரைந்த வந்த போலீசார் விபத்து குறித்து விசாரணை செய்தனர். உயிரிழந்தவர்களை போலீசார் கம்பம் அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்தில் உயிரிழந்த தர்மராஜ் இவர் ராணுவத்தில் பணியாற்றி வருவதும் விடுமுறையில் சொந்த ஊருக்கு வந்த நிலையில் விபத்து நடந்தது அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இவருக்கு திருமணம் ஆகி 7 மாதங்களே ஆன நிலையில் உயிரிழந்தது அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படியுங்கள்