கோவை கார் வெடிப்பு பதற்றத்துக்கு இடையே தமிழ்நாடு முழுவதும் இன்று தேவர் ஜெயந்தி  கொண்டாடப்பட்டு வரும் நிலையில் நெல்லை புதிய பேருந்து நிலையத்தில் துப்பாக்கியுடன் இருவர் பிடிபட்ட சம்பவம்  பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது. 

ரோந்து பணியில் போலீசார்

கோவை கார் வெடி விபத்து சம்பவம் தமிழகத்தில் பதற்றமான சூழ்நிலை நிலவி வரும் நிலையில் நெல்லையில் சந்தேகத்திற்குரிய நபரிடம் இருந்து துப்பாக்கி பறிமுதல் செய்யப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நெல்லை மாவட்டத்தின் பிரதான பேருந்து நிலையமான வேய்ந்தான் குளம் புதிய பேருந்து நிலையத்தில் நாள்தோறும் நெல்லை மட்டுமல்லாமல் அண்டை மாவட்டங்கள் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து ஆயிரக்கணக்கானோர் வந்து செல்கின்றனர். நெல்லை மற்றும் வெளி மாவட்டங்களுக்கு செல்வதற்காக இங்கு இரவு முழுவதும் விடிய விடிய பேருந்துகள் இயக்கப்படுவது வழக்கம். இதற்கிடையில் தமிழகம் முழுவதும் தேவர் ஜெயந்தி விழா இன்று கொண்டாடுவதை முன்னிட்டு நள்ளிரவு நெல்லை புதிய பேருந்து நிலையத்தில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர்.

திமுகவினராக செயல்படும் டிஜிபி..! ஒவ்வொன்றுக்கும் தகுந்த பதில் கொடுக்கப்படும்..! அண்ணாமலை ஆவேசம்

துப்பாக்கி பறிமுதல்

அப்போது இருவர் சந்தேகத்துக்கு இடமான வகையில் பேருந்து நிலையத்தில் சுற்றிவந்துள்ளனர். இதனையடுத்து அவர்களின் உடமைகளை சோதனை செய்தபோது உள்ளே துப்பாக்கி இருந்ததை கண்டு போலீசார் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இதையடுத்து அந்த நபர்கள் யார்? எங்கிருந்து வந்தார்கள்? கையில் ஏன் துப்பாக்கி எடுத்து வந்தார்கள் என்பது குறித்து மேலப்பாளையம் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர். இருவரும் மேலப்பாளையத்தைச் சேர்ந்த முத்துராஜ் (20) மற்றும் பால்துரை(24) என்பது தெரியவந்துள்ளது மேலும் இருவர் மீதும் ஏற்கனவே சில வழக்குகள் நிலுவையில் இருப்பதாகவும் கூறப்படுகிறது.

இரண்டு பேர் கைது

எனவே இரவு நேரத்தில் கையில் துப்பாக்கியுடன் வலம் வர காரணம் என்ன ஏதேனும் சதி திட்டத்துடன் துப்பாக்கி எடுத்து வந்தார்களா துப்பாக்கி வைப்பதற்கான உரிமம் வைத்துள்ளார்களா என்பது குறித்து மேலப்பாளையம் போலீசார் இருவரிடமும் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் ஏற்கனவே கோவை கார் வெடிப்பு சம்பவத்தை தொடர்ந்து தமிழகம் முழுவதும் ஒருவித பதற்றமான சூழல் நிலவி வருகிறது இதையொட்டி போலீசார் பல்வேறு சோதனைகளில் ஈடுபட்டு வரும் நிலையில் நெல்லை பேருந்து நிலையம் அருகே இருவர் கை துப்பாக்கியுடன் பிடிபட்ட சம்பவம் மேலும் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது

இதையும் படியுங்கள்

பொறுப்பற்ற முறையில் அரசியல் செய்ய முயலும் ஆளுநர்..! உடனடியாக பதவியில் இருந்து நீக்க வேண்டும்- கே பாலகிருஷ்ணன்