திமுகவினராக செயல்படும் டிஜிபி..! ஒவ்வொன்றுக்கும் தகுந்த பதில் கொடுக்கப்படும்..! அண்ணாமலை ஆவேசம்

 காவல்துறை டிஜிபி மற்றும் உளவுத்துறை ஏடிஜிபி  காவல்துறையினராக இல்லாமல் திமுகவினரை போல் செயல்படுகிறார்கள். காவல்துறை உயர் அதிகாரிகள் தன்னிச்சையாக செயல்படாமல் ஆளும் திமுக அரசை மகிழ்விக்க மட்டுமே இயங்கிக் கொண்டிருக்கிறார்கள் என அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
 

Annamalai accused Tamil Nadu DGP of acting like DMK

மத்திய அரசு எச்சரித்ததா..?

கோவை கார் வெடி விபத்து தொடர்பாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கருத்து தெரிவித்த நிலையில், தமிழக காவல்துறையின் செயல்பாட்டை அண்ணாமலை விமர்சிப்பதாக குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பாக தமிழக காவல்துறை சார்பாக நேற்று அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டது. அதில், வெடிகுண்டு நிகழ்வு கோவையில் நடக்கப் போவதாக புதுடில்லி உள்துறை அமைச்சகம் முன்பாகவே  எச்சரித்ததாக புகார் கூறுகிறார். இது அபத்தமானது.  ஏனென்றால்,  அவர் குறிப்பிடுவது, புது டில்லி உள்துறை அமைச்சகத்தில் இருந்து அனைத்து மாநில அரசுகளுக்கும்,  யூனியன் பிரதேசங்களுக்கும அனுப்பப்பட்ட  பொதுவான சுற்றறிக்கை ஆகும்.

இந்துத்துவா பிரச்சாரம் செய்கிறார் தமிழக ஆளுநர் ஆர்.என் ரவி! கொந்தளிக்கும் வைகோ - பின்னணி என்ன ?

இதில் கோவை சம்பவம் பற்றி எந்த இடத்திலும் கூறப்படவில்லை.  18.10.2022 தேதியிட்ட வழக்கமான சுற்றறிக்கை 21 ஆம் தேதி  பெறப்பட்டு உடனே அனைத்து நகரங்களுக்கும்,  மாவட்ட காவல் அதிகாரிகளுக்கும் தெரிவிக்கப்பட்டது. இவர் சொல்வது போல் கோவையில் இந்த சம்பவம் சில  குறிப்பிட்ட  நபர்கள் நடத்தப் போகிறார்கள் என்ற தகவல் கிடைத்திருத்தால்  தமிழ்நாடு காவல்துறை அந்த நிமிடமே அந்த நபர்களைக் கைது செய்து , வீடுகளை சோதனையிட்டு ,  வெடி பொருட்களை கைப்பற்றி இருக்கும்.

Annamalai accused Tamil Nadu DGP of acting like DMK

டிஜிபி திமுகவா.?

 எனவே இது போன்ற உண்மையில்லாத  மிகைபடுத்தப்பட்ட செய்திகளையும் வதந்திகளையும் முன்னாள் கர்நாடக காவல் அதிகாரி பரப்பி தமிழ்நாடு காவல்துறைக்கு களங்கம் விளைவிக்க வேண்டாம் என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில் இதற்க்கு பதில் அளிக்கும் வகையில் அண்ணாமலை வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், தமிழக காவல்துறை இன்று வெளியிட்டுள்ள பத்திரிகை செய்தியில் குறிப்பிடப்பட்ட ஒவ்வொன்றுக்கும் தகுந்த பதில் விரைவில் வழங்கப்படும்.  காவல்துறையில் பணிபுரியும் சகோதர சகோதரிகள் மீது எங்களுக்கு பெருமதிப்பும் மரியாதையும் உள்ளது. ஆனால் காவல்துறை டிஜிபி மற்றும் உளவுத்துறை ஏடிஜிபி  காவல்துறையினராக இல்லாமல் திமுகவினரை போல் செயல்படுகிறார்கள். காவல்துறை உயர் அதிகாரிகள் தன்னிச்சையாக செயல்படாமல் ஆளும் திமுக அரசை மகிழ்விக்க மட்டுமே இயங்கிக் கொண்டிருக்கிறார்கள். 

100 கடைகள் ஓகே! ராஜினாமா செய்யுங்க.. அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு அண்ணாமலை விட்ட சவால் !

Annamalai accused Tamil Nadu DGP of acting like DMK

காவல்துறையில் அரசியல்

இதுவரை நாங்கள் முன் வைத்த அனைத்து குற்றச்சாட்டுகளும் இரண்டு உயர் அதிகாரிகளுக்கு எதிராக மட்டுமே ஆனால் அவர்கள் தங்களைக் காப்பாற்றிக்கொள்ள காவல்துறையிலிருந்து பொதுவான ஒரு பத்திரிக்கை செய்தியை வெளியிட்டுள்ளார்கள். காவல்துறையின் மாண்பை குறைத்து விட்டதாக என் மீது குற்றச்சாட்டு சுமத்துவதற்கு பதிலாக இது போன்ற தீவிரவாத சம்பவங்கள் எவ்வாறு நடந்தது என்பதனை அவர்கள் ஆராய வேண்டும். பல பெருமைகளுக்கு பெயர் போன தமிழக காவல் துறையில் அரசியலைப் புகுத்தி சிறுமைப்படுத்துவது யார் என்று மக்கள் அறிவர் என அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

இதையும் படியுங்கள்

அண்ணாமலை தொடர்ந்து அவதூறு பரப்புகிறார்! இதெல்லாம் அபத்தம் - எச்சரித்த தமிழ்நாடு காவல்துறை !!

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios