வேலைக்காரனிடம் வீட்டை ஒப்படைத்து வெளிநாடு போன தொழிலதிபர்.. 1000 கிராம் தங்க நகை கொள்ளை.. 1 நேபாளி கைது.
கீழ்ப்பாக்கத்தில் உள்ள ரியல் எஸ்டேட் அதிபரின் வீட்டில் 1000 கிராம் தங்க நகைகள் திருடப்பட்ட வழக்கில் நேபாள நாட்டைச் சேர்ந்த ஒருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.
கீழ்ப்பாக்கத்தில் உள்ள ரியல் எஸ்டேட் அதிபரின் வீட்டில் 1000 கிராம் தங்க நகைகள் திருடப்பட்ட வழக்கில் நேபாள நாட்டைச் சேர்ந்த ஒருவரை போலீசார் கைது செய்துள்ளனர். அந்த நபரிடம் இருந்து போலீசார் 45 கிராம் தங்க நகைகளை பறிமுதல் செய்துள்ளனர்.
சென்னை கீழ்ப்பாக்கம் பரசு தெருவை சேர்ந்தவர் சாய் வெங்கட் பிரசாத், (49) இவர் ரியல் எஸ்டேட் மற்றும் ஏற்றுமதி இறக்குமதி தொழில் செய்து வருகிறார். இவரின் வீட்டில் கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாக நேபாள நாட்டைச் சேர்ந்த ராமு மற்றும் சங்கர் ஆகிய இருவரும் வீட்டு வேலை செய்து வந்தனர்.
இந்நிலையில் இருவரையும் வீட்டை பார்த்துக் கொள்ளுமாறு கூறிவிட்டு, சாய் வெங்கட் தனது குடும்பத்துடன் இத்தாலி நாட்டுக்குச் சென்றார். பணி நிமித்தமாக அவர் அங்கு சென்றதாக தெரிகிறது. பின்னர் கடந்த மாதம் 24-ஆம் தேதி அவருக்கு கொரியர் ஒன்று வந்தது. வீட்டில் யாரும் இல்லாததால் கொரியர் ஊழியர் சாய் வெங்கட்டை செல்போனில் தொடர்பு கொண்டு தெரிவித்துள்ளார்.
இதையும் படியுங்கள்: நடத்தையில் சந்தேகம்.. தூங்கிக் கொண்டிருந்த மனைவியை துடிதுடிக்க கொன்றுவிட்டு கணவர் என்ன செய்தார் தெரியுமா?
அப்போது சாய் வெங்கட் உடனே தன் வீட்டில் வேலை செய்யும் ராமு, சங்கரை தொடர்பு கொள்ள முயன்றார். ஆனால் அவரது செல்போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது. இதனால் தனது கார் ஓட்டுநர் லோகேஷ் என்பவரை தொடர்பு கொண்டு விசாரித்தார், அப்போது ராமு சங்கர் இருவரும் எந்த தகவலும் கூறாமல் வீட்டிலிருந்து சென்றுவிட்டதாக அவர் கூறினார். இது சாய் வெங்கட்டுக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியது, பின்னர் அவசர அவசரமாக பணியை முடித்துக்கொண்டு குடும்பத்துடன் சென்னை திரும்பினார், அப்போது வீட்டிற்கு வந்து பீரோவை நிறந்து பார்த்தபோது 1000 கிராம் எடையுள்ள தங்க நகைகள் காணாமல் போயிருந்தது.
பீரோவில் இருந்த வெள்ளி பொருட்களும் கொள்ளையடிக்கப்பட்டிருந்தது. இதையடுத்து சாய் வெங்கட் தனது வீட்டில் வேலை செய்தா ராமு , சங்கர் ஆகியோர் மீது கீழ்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். தனிப்படை அமைத்து நேபாளத்துக்கு தப்பியோடிய ராமு சங்கர் ஆகிய இருவரையும் பிடிக்க தனிப்படை போலீசார் விரைந்தனர். இந்நிலையில் அவர்கள் ஆக்ராவில் தங்கியிருப்பதாக தகவல் வந்தது.
இதையும் படியுங்கள்: சென்னையில் ரூ.2.36 கோடி மதிப்பிலான போதைப்பொருள் பறிமுதல்... எத்தியோப்பியாவை சேர்ந்தவர் கைது!!
அவர்கள் இருவருக்கும் தங்க அடைக்கலம் கொடுத்த மற்றொரு நேபாள வாலிபர் கருண் என்பவரையும் போலீசார் பிடித்து விசாரித்தனர். அவரிடம் விசாரித்ததில் 45 கிராம் தங்க நகைகள் தன்னிடம் அவர்கள் கொடுத்ததாகவும், அவர்கள் சில நாட்கள் தன்னிடம் தங்கியதாகவும் கூறினார். அவரிடமிருந்த 40 கிராம் தங்க நகைகளை போலீசார் பறிமுதல் செய்தனர். பின்னர் அந்த நபரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். மாயமான சங்கர், ராமுவை ஆகியோரை போலீசார் தேடி வருகின்றனர்.