கொருக்குப்பேட்டையில், பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்து வந்த முதியவர் உட்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

சென்னை கொருக்குப்பேட்டை பகுதியை சேர்ந்த, 12 வயது சிறுமி அங்குள்ள பள்ளியில் ஏழாம் வகுப்பு படித்து வருகிறாள்.  இந்நிலையில் நேற்று முன் தினம் மாலை சிறுமி டியூஷனுக்கு சென்ற போது, அவளை பார்த்த ஆசிரியை நீ ஏன் சோர்வாக இருக்கிறாய் என கேட்டுள்ளார்.

அதற்கு அந்த சிறுமி, தனக்கு மூன்று பேர் தொடர்ந்து பாலியல் தொல்லை கொடுத்து வருவதாக தெரிவித்தார். அதைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த ஆசிரியை, இதுபற்றி ஆர்கே நகர் போலீசாருக்கு தகவல் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரித்தனர்.

அதில், அந்த சிறுமியின் தந்தை இறந்து விட்டதாகவும்,  அவள் தாயின் பராமரிப்பில் இருந்து வந்ததும் தெரியவந்தது. தாயார் தினமும் கூலி வேலைக்கு சென்று விட்ட பிறகு, சிறுமி மட்டும் வீட்டில் தனியாக இருப்பார். அப்போது 72 வயதாகும் ரத்தினம்,  46 வயதாகும் ராஜா, 38 வயதாகும் லக்ஷ்மணன் ஆகிய 3 பேரும் கடந்த ஒரு மாதமாக வீட்டில் தனியாக இருந்த சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்து வந்தது விசாரணையில் தெரியவந்தது.

இதையடுத்து ரத்தினம், ராஜா, லட்சுமணன், ஆகிய ஆகியோரை தண்டையார்பேட்டை மகளிர் போலீசார், இவர்கள் 3 பேர் மீதும் வழக்கு பதிந்து, கைது செய்து விசாரித்து வருகின்றனர். சிறுமி முதலுதவி சிகிச்சைக்குப் பின் சென்னையில் உள்ள ஒரு காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.