Asianet News TamilAsianet News Tamil

சிறுவனின் கை, கால்கள் கட்டி பாலியல் வன்கொடுமை செய்து கொடூர கொலை! குடிநீர் தொட்டியில் சடலம்! உறவினர் கைது.!

தருமபுரி மாவட்டம் காட்டம்பட்டி கிராமத்தை சேர்ந்த ஆதிமூலம் (42). பொக்லைன் டிரைவர். இவரது மனைவி சுதா ( 35). இவர்களது மகன் மதியரசு(6). தனியார் பள்ளி ஒன்றில் 2-ம் வகுப்பு படித்து வந்துள்ளார். 

6 year old boy brutally murder...relative arrested in dharmapuri
Author
First Published Jul 19, 2023, 1:18 PM IST | Last Updated Jul 19, 2023, 1:19 PM IST

தர்மபுரியில் 6 வயது சிறுவன் கை, கால்கள் கட்டப்பட்டு, வாயில் டேப் ஒட்டப்பட்டு பாலியல் வன்கொடுமை செய்து குடிநீர் தொட்டியில் சடலமாக கண்டெடுக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

தருமபுரி மாவட்டம் காட்டம்பட்டி கிராமத்தை சேர்ந்த ஆதிமூலம் (42). பொக்லைன் டிரைவர். இவரது மனைவி சுதா ( 35). இவர்களது மகன் மதியரசு(6). தனியார் பள்ளி ஒன்றில் 2-ம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில், கடந்த 16ம் தேதி வீட்டின் வெளியே விளையாடிக்கொண்டிருந்த சிறுவன் திடீரென காணாமல் போயிருக்கிறார். சிறுவனை பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இதனால், பதற்றம் அடைந்த பெற்றோர் கிருஷ்ணாபுரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். 

இதையும் படிங்க;- Power Shutdown in Chennai: சென்னையில் இந்த பகுதிகளில் 5 நேரம் மின்தடை.. லிஸ்ட்ல உங்க ஏரியா இருக்கா பாருங்க!

இந்த புகாரை அடுத்து வழக்குப்பதிவு செய்த போலீசார் மாயமான சிறுவனை தீவிரமாக தேடி வந்தனர். இதனிடையே, அதே பகுதியில் கிராமத்தில் பயன்பாட்டில் இல்லாத குடிநீர் மேல் நிலை நீர்தேக்க தொட்டி ஒன்றில் சிறுவன் கை, கால்கள் கட்டப்பட்டு, வாயில் டேப் ஒட்டப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் தொடர்பாக சிறுவனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தர்மபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

இதையும் படிங்க;-  கூல்ட்ரிங்க்ஸில் வோட்காவை கலந்து கொடுத்து காதல் மனைவியை நண்பனுக்கு விருந்தாக்கி ரசித்த கணவர்..!

இந்நிலையில், சிறுவனை உறவினர் ஒருவரே பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 6 வயது சிறுவனை ஐஸ்கிரீம் வாங்கி தருவதாக அழைத்து சென்று பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. சிறுவனின் உறவினரான 18 வயதான பிரகாஷ் என்பவர் போக்சோ மற்றும் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார். செல்போனை தராததால் ஆத்திரத்தில் கொலை செய்ததாக முதலில் தகவல் வெளியான நிலையில், திடீர் திருப்பமாக பாலியல் தொல்லை தந்து கொலை செய்தது அம்பலமாகியுள்ளது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios