Asianet News TamilAsianet News Tamil

சீ... அங்கிள் ரொம்ப மோசம்... வக்ர ஆசைக்கு குழந்தைகளை பயன்படுத்திய நபருக்கு 14 ஆண்டு சிறை

வீட்டுக்கு விளையாட வந்த பெண் குழந்தைகளிடம் சில்மிஷம் செய்துவந்த 45 வயது தந்தைக்கு 14 ஆண்டு கடுங்காவல் தண்டனை விதித்து போக்சோ சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

45-year-old gets 14 years RI for sexual assault of son's minor friends at home
Author
First Published Apr 20, 2023, 4:08 PM IST | Last Updated Apr 20, 2023, 5:04 PM IST

45 வயதுடைய நபருக்கு 14 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத்தண்டனை விதித்து போக்சோ சிறப்பு நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தீர்ப்பளித்தது. 2017ஆம் ஆண்டு தனது மகனுடன் விளையாடுவதற்காக தனது வீட்டிற்கு வந்த 5 முதல் 7 வயதுடைய சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்துவந்த குற்றச்சாட்டின் பேரில் அவர் கைது செய்யப்பட்டார்.

குற்றம்சாட்டப்பட்ட நபர் குழந்தைகளிடம் தவறாக நடந்துகொள்வதை முதலில் கண்டறிந்த பாதிக்கப்பட்ட குழந்தை ஒன்றில் தாய் கூறிய வாக்குமூலத்தை அரசு தரப்பு வழக்கறிஞர் சஞ்சனா சர்மா நீதிமன்றத்தில் சாட்சியாக சமர்ப்பித்தார். அந்தத் தாயின் 5 வயது மகள் குற்றம் சாட்டப்பட்டவரின் வீட்டிற்குச் சென்று விளையாடுதவது வழக்கம். ஆனால், ஒரு வாரமாக மகள் அங்கு செல்ல மறுப்பதை கவனித்த தாயார், மகளின் நயமாகப் பேசி உண்மைத் தெரிந்துகொண்டிருக்கிறார்.

Karnataka Elections 2023: இவர்தான் உங்க நட்சத்திர தலைவரா? காங்கிரஸை விளாசும் பாஜக

ஜூலை 12, 2017 அன்று, இரவு 9 மணியளவில் தனது மகளுடன் டியூஷன் வகுப்புகளில் இருந்து திரும்பிக்கொண்டிருந்தபோது, அந்த வீட்டுப் பையனுடன் விளையாடுவதை ஏன் நிறுத்திவிட்டாய் என்று கேட்டிருக்கிறார். முதலில் பதில் சொல்லத் தயங்கிய குழந்தை, அம்மா திட்டமாட்டேன் என்று உறுதி அளித்த பின்பு நடந்ததைக் கூறி இருக்கிறார். அந்தப் பையன் தன்னுடன் விளையாடுவதற்காக தனது வீட்டிற்கு அழைத்தால், அங்கு ​​அவனுடைய அப்பா தன்னை தகாத முறையில் தொடுகிறார் என்று குழந்தை கூறியிருக்கிறாள். அப்போது எல்லாம் தான் மிகவும் மோசமாக உணர்ந்ததாகவும், எரிச்சலடைந்ததாகவும் குழந்தை தாயிடம் தெரிவித்திருக்கிறாள்.

இந்த விஷயத்தை அறிந்த தாய் தன் கணவரிடம் கூறியுள்ளார். பின், அவர்கள் இருவரும் குற்றம் சாட்டப்பட்டவரின் வீட்டிற்குச் சென்று விசாரிக்க முயன்றுள்ளனர். அங்கு போனதும் குற்றம் சாட்டப்பட்டவரின் மனைவி, அவர் தூங்கிக் கொண்டிருந்ததாக கூறியிருக்கிறார். இருந்தாலும் அவரை எழுப்பச் செய்து அவரிடம் விசாரித்துள்ளனர். ஆனால் அந்த நபர் தன்மீதான குற்றச்சாட்டுகளை முற்றிலும் நிராகரித்துள்ளார்.

பழனியில் வரதட்சணை கொடுமை தாங்காமல் 3 மாத கர்ப்பிணி உடலில் தீ வைத்து தற்கொலை

இது நடந்த அடுத்த நாளே, அந்தச் தாயைச் சந்திக்க வந்த இன்னும் 3 தாய்மார்கள், தங்கள் குழந்தைக்கு நடந்த கொடுமையைப் பற்றிக் கேள்விப்பட்ட பின்னர், தாங்களும் தங்கள் குழந்தைகளிடம் விசாரித்தத் தெரிவித்துள்ளனர். அப்போது குற்றம் சாட்டப்படும் நபர் தங்கள் மகள்களிடமும் அதே மாதிரியான செயலில் ஈடுபட்டிருந்ததை அந்தத் தாய்மார்கள் அறிந்துகொண்டுள்ளனர். இதனையடுத்து பாதிக்கப்பட்ட குழந்தைகளின் அம்மாக்கள் அனைவரும் ஜூலை 15, 2017 அன்று காவல் நிலையத்திற்குச் சென்று வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

(பாலியல் வன்கொடுமை தொடர்பான வழக்கு என்பதால், உச்ச நீதிமன்ற உத்தரவின்படி, பாதிக்கப்பட்டவரின் தனியுரிமையைப் பாதுகாக்க அவர்களுடைய அடையாளத்தை வெளியிடாமல் இந்தச் செய்தி எழுதப்பட்டுள்ளது.)

ராகுல் காந்தியின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி: சூரத் அமர்வு நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios