Asianet News TamilAsianet News Tamil

ராமஜெயம் கொலை விசாரணை வலையத்தில் இருந்த நபரை படுகொலை செய்த 4 பேர் சரண்

அமைச்சர் கே.என்.நேருவின் தம்பி ராமஜெயம் கொலையில் விசாரிக்கப்பட்ட நபர் வெட்டி கொலை செய்யப்பட்ட விவகாரத்தில் 4 பேர் சரண் அடைந்துள்ளனர், மேலும் ஒருவரை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

4 persons surrendered on former pmk person murder case in trichy vel
Author
First Published Dec 13, 2023, 12:17 PM IST

திமுக முதன்மை செயலாளரும், அமைச்சருமான கே.என்.நேருவின் சகோதரரும், தொழிலதிபருமான ராமஜெயம் கடந்த 2012 மார்ச் 29ம் தேதி அன்று அதிகாலையில் நடைபயிற்சி மேற்கொண்ட போது அடையாளம் தெரியாத நபர்களால் கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்டார். அவரது உடல் திருச்சி மாவட்டம் கல்லணை சாலையில் உள்ள காவிரிக்கரையோரம் உள்ள முட்புதரில், கைகள் மற்றும் கால்கள் இரும்பு கம்பிகளால் கட்டப்பட்ட நிலையில் கண்டெடுக்கப்பட்டது.

இக்கொலை சம்பவம் தமிழ்நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. ஆனாலும் கொலை நடந்து 13 ஆண்டுகளைக் கடந்த பிறகும் இதுவரை ஒருவரை கூட காவல்துறையால் கைது செய்ய முடியவில்லை. இந்த வழக்கு தொடர்பாக சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் விசாரிக்கப்பட்டனர். ஆனால் எந்த முன்னேற்றமும் இல்லாததால் கடந்த 2012-ம் ஆண்டு சிபிசிஐடி விசாரணைக்கும், பின்னர் 2017-ம் ஆண்டு சிபிஐ விசாரணைக்கும் மாற்றப்பட்டது. கடந்த 2021ம் ஆண்டில் திமுக ஆட்சிக்கு வந்தவுடன், கே.என்.ராமஜெயம் கொலை வழக்கு விசாரணை சூடுபிடித்தது. இந்த வழக்கு தற்போது சிபிசிஐடி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். வழக்கில் தொடர்பு உடையதாக சந்தேகிக்கப்படும் 13 ரவுடிகளைப் பிடித்து அவர்களிடம் உண்மை கண்டறியும் சோதனை நடத்தப்பட்டது.

ரஜினியின் சிலைக்கு பூஜை செய்து மக்களுக்கு அன்னதானம் வழங்கிய மதுரை ரசிகர்

இந்த விசாரணையில்  திருச்சி அரசு மருத்துவமனை எதிரில் உள்ள புத்தூர் ஆபீஸர்ஸ் காலனி பகுதியைச் சேர்ந்த பிரபு என்கின்ற பிரபாகரன் விசாரணை செய்யப்பட்டு வந்தார். இவர் பாட்டாளி மக்கள் கட்சியில் நிர்வாகியாக இருந்த கட்சியை விட்டு நீக்கப்பட்டார். இவர்  திருச்சி அரசு மருத்துவமனை அருகே தாயார் ஆம்புலன்ஸ் நிறுவனத்தை நடத்தி வந்த பிரபாகரன் மீது பத்துக்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன. நேற்று முன்தினம் இரவு ஒன்பது முப்பது மணி அளவில் மூன்று நபர்களால் அவரது அலுவலகத்தில் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இது தொடர்பான சிசிடிவி காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகி பரபரப்பு ஏற்பட்டது. 

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

மேலும், பிரபாகரனிடம் கடந்த 9ம் தேதி அன்று ராமஜெயம் கொலை வழக்குத் தொடர்பாக சிறப்பு புலனாய்வு அதிகாரிகள் விசாரணை நடத்தினர். ராமஜெயம் கொலைக்கு பயன்படுத்தப்பட்ட வெர்ஷா ரக கார் யாரிடம் இருந்து யாருக்கு விற்கப்பட்டது என்பது தொடர்பாக பிரபாகரனிடம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டதாக கூறப்படுகிறது. மேலும், விசாரணைக்கு நாளை மீண்டும் ஆஜராக உள்ள நிலையில் வெட்டி கொலை செய்யப்பட்டுள்ளார்.

பிரபாகரனின் கொலை வழக்கு தொடர்பாக அரசு மருத்துவமனை காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்நிலையில்  இன்று கொலை வழக்கில் தொடர்பாக லட்சுமணன்(38), ரியாஸ் ராஜேஷ்(24), பஷீர்(29), ராஜேஷ்பைலட்(28), ஆகிய 4 பேர்  திருச்சி மாவட்டம் திருவெறும்பூர்  காவல் நிலையத்தில் சரணடைந்தனர்.  தொடர்ந்து காவல் துறையினர் 4 பேரையும் கைது செய்து கொலைக்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

நாங்க என்ன உங்க அப்பா வீட்டு காசையா கேட்டோம்? மக்களோட வரிப்பணம்; மத்திய அமைச்சருக்கு உதயநிதி பதிலடி

மேலும், இந்த கொலை வழக்கு தொடர்பாக தலைமறைவாக உள்ள அப்பு என்கிற ஹரிகிருஷ்ணன் என்பவரை தேடி காவல்துறையினர் வருகின்றனர். ராமஜெயம் கொலை வழக்கு விசாரணைக்கு நாளைக்கு பிரபு ஆஜராக உள்ள நிலையில் படுகொலை செய்யப்பட்டு இருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Follow Us:
Download App:
  • android
  • ios