விழுப்புரத்தைச் சேர்ந்தவர் ரேவதி(பெயர் மாற்றப்பட்டுள்ளது). 14 வயது சிறுமியான இவர் சென்னை அடையாறிலிருக்கும் ஒரு வீட்டில் வேலை பார்த்து வந்துள்ளார். இந்தநிலையில் கடந்த 8ம் தேதி சிறுமி காணாமல் போயிருக்கிறார். பல இடங்களில் தேடி பார்த்தும் சிறுமி கிடைக்காததால் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இதனிடையே பாலவாக்கத்தில் உள்ள ஒரு தள்ளுவண்டி கடையில் வேலை செய்வதை பார்த்ததாக காவல் நிலையத்திற்கு ஆட்டோ ஓட்டுநர் ஒருவர் தகவல் அளித்தார்.

அதன்படி அங்கு சென்ற போலீசார் சிறுமியை மீட்டனர். அவரிடம் விசாரணை நடத்தியதில் 3 வாலிபர்கள் தன்னை கடத்தி கற்பழித்த தகவலை சிறுமி கூறியிருக்கிறார். சிறுமி அடையாறில் வேலை பார்த்த போது அதே பகுதியைச் சேர்ந்த சதீஷ்குமார் (24) என்கிற வாலிபருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. சிறுமியிடம் பழகி வந்த வாலிபர், அவருக்கு நிறைய சம்பளத்தில் வேறு இடத்தில் வேலை வாங்கி தருவதாக ஆசை வார்த்தைகள் கூறியுள்ளார். அதை நம்பி சிறுமி அவருடன் ஒரு ஆட்டோவில் துரைப்பாக்கத்திற்கு சென்றுள்ளார். அங்கிருந்து அவரது நண்பர் வினோத் (23) என்பவரின் காரில் சிறுமியை ஏற்றியுள்ளார். காரில் இன்னொரு நண்பரான மஹாராஜா (29) என்பவரும் இருந்தார்.

4ம் வகுப்பு மாணவியை காமவெறியுடன் சீரழித்த 8ம் வகுப்பு மாணவர்கள்..! பள்ளி வளாகத்தில் நிகழ்ந்த கொடூரம்..!

பின் மூன்று பேரும் சேர்ந்து சிறுமியை அக்கரை கடற்கரைக்கு அழைத்து சென்றுள்ளனர். அங்கு ஆள்நடமாட்டமில்லாத இடத்தில் காரை நிறுத்தி அதனுள்ளே வைத்து சிறுமியை மாறி மாறி மூன்று பேரும் கற்பழித்த பின் சிறுமியை அங்கேயே விட்டுவிட்டு மூவரும் தப்பியுள்ளனர். சிறுமி கூறிய தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்தில் இருந்த கண்காணிப்பு கேமராக்களை போலீசார் ஆய்வு செய்து வாகன எண்ணை கண்டறிந்தனர். அதை வைத்து சிறுமியை சீரழித்த மூவரையும் போலீசார் அதிரடியாக கைது செய்தனர். அவர்கள் மீது போக்சோ சட்டத்தில் வழக்கு பதியப்பட்டிருக்கும் நிலையில் சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.