உத்தரபிரதேச மாநிலம் ஆக்ராவை சேர்ந்தவர் ஆகாஷ் (வயது 29). இவரது மனைவி வந்தனா (25). இந்த தம்பதியினருக்கு 10 மாத ஆண் குழந்தை ஒன்று உள்ளது. சேலம் அருகே உள்ள பனங்காடு பெருமாகவுண்டனூர் பகுதியில் தங்கியிருக்கும் இவர்களுடன் உறவினரான சன்னி (15) என்ற சிறுவனும் தங்கியிருந்தார். மூவரும் செம்மண்திட்டு பகுதியை சேர்ந்த வெள்ளிபட்டறை அதிபர் தங்கராஜ் என்பவரிடம் கடந்த ஒரு வாரத்திற்கு முன் வேலைக்கு சேர்ந்துள்ளனர். நேற்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை என்பதால் 3 பேரும் வீட்டில் இருந்தனர். நள்ளிரவில் குழந்தை நீண்ட நேரமாக அழுது கொண்டே இருந்ததால் சந்தேகமடைந்த அக்கம் பக்கத்தினர் ஆகாஷ் வீட்டிற்கு சென்று பார்த்தனர்.

அங்கு வந்தனா கழுத்து அறுக்கப்பட்டு ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்தார். வீட்டின் பின்புறம் இருக்கும் தோட்ட பகுதியில் ஆகாஷ் மற்றும் சன்னி ஆகியோரும் அதே போல கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் கொலை செய்யப்பட்டு கிடந்தனர். அதைக்கண்டு அதிர்ச்சியடைந்த அவர்கள் உடனடியாக காவல்துறைக்கு தகவல் அளித்தனர். விரைந்து வந்த காவலர்களின் மூன்று பேரின் உடல்களையும் பிரேத பரிசோதனைக்கு கொண்டு சென்றனர். கொலை வழக்கு பதியப்பட்டு விசாரணை மேற்கொண்ட காவலர்கள் அந்த பகுதியில் இருந்த கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்தனர்.

6ம் வகுப்பு மாணவியை மாறி மாறி கற்பழித்த கொடூரர்கள்..! ஆற்றுப்பகுதியில் ஆடைகளை அவிழ்த்து அட்டூழியம்..!

அதில் கொலையாளிகள் வேகமாக செல்லும் காட்சிகள் பதிவாகி இருந்தது. அதைவைத்து தீவிரமாக தேடிய போலீசார் கொலையாளிகளான ஆக்ராவை சேர்ந்த விவேக், தினேஷ், விஜி ஆகிய 3 பேரையும் அதிரடியாக கைது செய்தனர். சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது. முன்விரோதம் காரணமாகவே கொலை நடந்ததாக தெரிகிறது. அதுகுறித்து விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

நள்ளிரவில் கதவை தட்டி உல்லாசத்திற்கு அழைத்த வாலிபர்..! அதிர்ச்சியில் அலறிய இளம்பெண்..!