கோவை மாவட்டம் ரத்தனபுரி அருகே இருக்கிறது கண்ணப்ப நகர். இந்த பகுதியைச் சேர்ந்தவர் ரேவதி(பெயர் மாற்றப்பட்டுள்ளது). 31 வயது இளம்பெண்ணான இவருக்கு திருமணமாகி கணவர் பெங்களூருவில் வேலை பார்த்து வருகிறார். கண்ணப்ப நகரில் இருக்கும் வீட்டில் ரேவதி மட்டும் தனியாக வசித்து வரும் நிலையில் அவ்வப்போது கணவர் விடுமுறையில் வந்து சென்றுள்ளார்.

இவர் வசிக்கும் அதே பகுதியைச் சேர்ந்தவர் ராஜா சிங் (26). ரேவதி தனியாக இருப்பதை நோட்டமிட்ட அந்த வாலிபர் சம்பவத்தன்று நள்ளிரவில் அவரது வீட்டிற்கு சென்றுள்ளார். அப்போது ரேவதி அயர்ந்து தூங்கி கொண்டிருந்தார். திடீரென கதவு தட்டப்படும் சத்தம் கேட்டு எழுந்த அவர் கதவை திறந்து பார்த்தபோது அங்கு ராஜா சிங் நின்று கொண்டிருந்தார். அவரிடம் 1 மணியளவில் எதற்காக என் வீட்டு கதவை தட்டுகிறாய்? என கேட்டுள்ளார். அப்போது திடீரென ரேவதியின் கையை பிடித்து இழுத்த ராஜா சிங் உல்லாசத்துக்கு அழைத்தார்.

6ம் வகுப்பு மாணவியை மாறி மாறி கற்பழித்த கொடூரர்கள்..! ஆற்றுப்பகுதியில் ஆடைகளை அவிழ்த்து அட்டூழியம்..!

அதிர்ச்சியடைந்த ரேவதி சத்தம் போட்டார். இதனால் பயந்து போன வாலிபர் வி‌ஷயத்தை வெளியே யாரிடமாவது சொன்னால் கொலை செய்து விடுவதாக மிரட்டி விட்டு அங்கிருந்து தப்பினார். இதையடுத்து நடந்த சம்பவம் குறித்து ரத்தினபுரி போலீசில் ரேவதி புகார் செய்தார். அதடிப்படையில்வழக்குப்பதிவு செய்த போலீசார் ராஜா சிங்கை அதிரடியாக கைது செய்தனர். சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் அவரிடம் தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.