கோவை கொலை சம்பவம்..! அடைக்கலம் கொடுத்த மேலும் 3 பேரை அதிரடியாக கைது செய்த போலீஸ்
கோவை நீதிமன்ற வளாகத்தில் கோகுல் என்பவர் கொலை செய்யப்பட்ட நிலையில் நேற்று 7பேரை போலீசார் கைது செய்த நிலையில் குற்றவாளிகளுக்கு அடைக்கலம் கொடுத்த மேலும் 3 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
நீதிமன்ற வளாகத்தில் கொலை
கோவை ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றில் ஆஜராகி விட்டு வெளியே வந்த கோகுல் என்ற நபரை ஐந்து பேர் கொண்ட கும்பலால் சரமாரியாக வெட்டி படுகொலை செய்தனர். கோகுலோடு வந்த மனோஜ் என்பவர் படுகாயங்களுடன் உயிர் தப்பி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சம்பவம் தொடர்பான காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. அரசியல் கட்சிகள் இந்த கொலைக்கு கடும் கண்டனத்தை தெரிவித்து இருந்தனர். இதனையடுத்து இந்த கொலை வழக்கு தொடர்பாக தனிப்படை அமைத்து கோவை மாநகர காவல் துறை விசாரித்து வந்தது. இந்த நிலையில் கொலை சம்பவத்தில் ஈடுபட்ட ஜோஸ்வா, கௌதம், ஹரி, பரணி சௌந்தர், அருண்குமார், சூர்யா, டேனியல் உள்ளிட்ட ஏழு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
Coimbatore : கோவை கொலை சம்பவம்.. 2 பேரை சுட்டுப்பிடித்த போலீஸ் - பரபரப்பு நிமிடங்கள் !!
அடைக்கலம் கொடுத்த 3 பேர் கைது
கோத்தகிரி பகுதியில் கைது செய்யப்பட்டவர்களை கோவை அழைத்து வந்தபோது மேட்டுப்பாளையம் அருகே வந்த போது யூசுப் என்ற உதவி ஆய்வாளரை கத்தியால் தாக்கிவிட்டு ஜோஸ்வா, கௌதம் தப்பிச் செல்ல முயன்றதாக கூறப்படுகிறது. இதனையடுத்து அந்த இரண்டு பேரையும் காவல்துறையினர் சுட்டுப் பிடித்துள்ளனர். சுட்டு பிடித்ததில் ஜோஸ்வா, கௌதம் என்கிற இருவருக்கும் தொடை பகுதியில் காயம் ஏற்பட்டதையடுத்து மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனையில் வைத்து முதலுதவி அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
இந்தநிலையில் கோகுல் கொலை வழக்கில் மேலும் 5 பேரை பிடித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதில் குற்றவாளிகளுக்கு மோட்டார் சைக்கிள்களை கொடுத்தும் தங்குவதற்கு இருப்பிடம் கொடுத்து அடைக்கலம் கொடுத்ததற்காக விக்னேஷ்,விக்ரம் உள்ளிட்ட 3 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
இதையும் படியுங்கள்