திருப்பூரில் வீட்டு வேலைக்கு வந்த சிறுமிய பல ஆண்டுகளாக மிரட்டி வன்கொடுமை செய்த இருவர் கைது
திருப்பூர் மாவட்டத்தில் வீட்டு வேலைக்காக வந்த சிறுமியை மிரட்டி பல ஆண்டுகளாக பாலியல் வன்கொடுமை செய்து வந்த உறவினர்கள் இருவரை காவல் துறையினர் போக்சோ சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தை அடுத்த கவுண்டச்சிபுதூர் ஊராட்சி கொண்டரசம்பாளையம் கிராமம் அண்ணா நகரை சேர்ந்தவர் தங்கராஜ் (வயது 50). கொண்டரசம்பாளையம் கிராமத்தில் ஜெராக்ஸ் மெஷின் சர்வீஸ் சென்டர் வைத்து தாராபுரம், திருப்பூர் மற்றும் சுற்று வட்டார பகுதிகளுக்கு நேரில் சென்று ஜெராக்ஸ் மெஷின்களை சர்வீஸ் செய்யும் தொழிலை செய்து வருகிறார்.
மாற்றுத்திறனாளியான இவரது மனைவிக்கு உடல் நல குறைவு ஏற்பட்டதால் கடந்த ஆறு ஆண்டுகளுக்கு முன் பத்தாம் வகுப்பு படித்து வந்த தனது தம்பி மகள் முறையான உறவுக்கார சிறுமிக்கு மாத சம்பளம் அடிப்படையில் மனைவிக்கு உதவியாக வீட்டு வேலைக்கு சேர்த்துள்ளார். பள்ளி சென்று வந்த நேரம் போக மீதி நேரம் சிறுமி தங்கராஜ் வீட்டில் தங்கி வேலை செய்து வந்தார். இந்நிலையில் தங்கராஜ் பள்ளிச் சிறுமிக்கு ஆசை வார்த்தை கூறி கடந்த ஆறு ஆண்டுகளாக சிறுமியுடன் பாலியல் வன்கொடுமை செய்து வந்துள்ளார். இதனிடையே 12ம் வகுப்பு முடித்த சிறுமி தாராபுரத்தில் உள்ள ஒரு கல்லூரியில் பட்டப்படிப்பு படித்து முடித்தார்.
வீட்டிலேயே பாலியல் தொழில் நடத்தி கல்லா கட்டிய கணவன், மனைவி; காவல்துறை அதிரடி
இந்நிலையில் கல்லூரி மாணவியின் அண்ணன் முறையான அதே பகுதியைச் சேர்ந்த வடிவேல் என்பவரது மகன் பிரகாஷ் (30) என்பவர் தங்கராஜின் உதவியாளராக அவரது கடையில் வேலைக்கு சேர்ந்தார். அப்போது தங்கராஜ், சிறுமி தனிமையில் இருப்பதை நேரில் பார்த்துவிட்ட மாணவியின் அண்ணன் முறையான பிரகாஷ் இந்த தகாத உறவை வெளியே கூறி விடுவதாக மாணவியை மிரட்டி உள்ளார். மேலும் பிரகாஷ் மாணவியை தனது இச்சைக்கு உட்படுத்திக் கொண்டு தங்கராஜ் வெளியூர் சென்ற நாட்களில் பாலியல் வன்கொடுமை செய்வதை வழக்கமாக வைத்துள்ளார்.
சுதந்திர தினம்: கோட்டை கொத்தளத்தில் 3ஆவது முறையாக கொடியேற்றும் முதல்வர் ஸ்டாலின்!
இந்நிலையில் உறவினர்கள் இருவர் தொடர்ந்து தன்னை பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கி மன உளைச்சலுக்கு உட்படுத்தியதால் தனக்கு உடல் நிலையும் பாதிக்கப்பட்டு விட்டதாக கூறி கல்லூரி மாணவி தாராபுரம் அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளரிடம் புகார் அளித்தார். வழக்கை பதிவு செய்து விசாரித்த மகளிர் காவல் நிலைய காவல் துறையினர் கல்லூரி மாணவியை மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்திய பின் மாணவியின் உறவினர்கள் தங்கராஜ், பிரகாசை போக்சோ சட்டப்பிரிவில் கைது செய்து அவர்கள் இருவரையும் மருத்துவ பரிசோதனைக்கும், நீதிமன்ற விசாரணைக்கும் உட்படுத்தி 15 நாள் காவலில் கோவை மத்திய சிறைக்கு இருவரும் அனுப்பி வைக்கப்பட்டனர்.
தாராபுரம் சுற்றுவட்டார பகுதிகளில் கல்லூரி மாணவியை அவளது பெரியப்பா முறையிலான நபரும் அண்ணன் முறையிலான நபரும் தொடர்ந்து பாலியல் பலாத்காரத்துக்கு உள்ளாக்கி கொடுமைப்படுத்திய சம்பவம் பெரும் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.