வீட்டிலேயே பாலியல் தொழில் நடத்தி கல்லா கட்டிய கணவன், மனைவி; காவல்துறை அதிரடி
சென்னை இராயபுரம் பகுதியில் வீட்டில் பாலியல் தொழில் நடத்தி வந்த கணவன், மனைவி இருவரையும் கைது செய்த காவல் துறையினர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
வடசென்னை இராயபுரம் பகுதியில் அமைந்துள்ள இராஜவேலு தெருவில் குடியிருப்பு நிறைந்த பகுதியில் அமைந்துள்ள வீடு ஒன்றில் பாலியல் தொழில் நடப்பதாக இராயபுரம் காவல் துறையினருக்கு இரகசிய தகவல் கிடைத்துள்ளது. அதன் அடிப்படையில் அங்கு மகளிர் காவல் துறையினர் உதவியுடன் சென்ற இராயபுரம் காவல் துறையினர் அந்த வீட்டிற்குள் அதிரடியாக நுழைந்தனர்.
அப்போது வீட்டில் பாலியல் தொழில் நடப்பது உறுதி செய்யப்பட்டது. வீட்டில் தனிமையில் இருந்த நபர்கள் மற்றும் வீட்டிலேயே பாலியல் தொழில் நடத்தி வந்த கணவன், மனைவி இருவரையும் இராயபுரம் காவல் துறையினர் கைது செய்து காவல் நிலையம் அழைத்துச் சென்றனர்.
சுதந்திர தினம்: கோட்டை கொத்தளத்தில் 3ஆவது முறையாக கொடியேற்றும் முதல்வர் ஸ்டாலின்!
விசாரணையில் கைது செய்யப்பட்டவர்களில் கணவன் மணிமாறன்(வயது 45) மனைவி சித்ரா (37) என்பதும் தெரியவந்தது. இதனையடுத்து கணவன், மனைவி இருவர் மீதும் வழக்கு பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.