ஆசைவார்த்தை கூறி 17 வயது சிறுமியை சீரழித்த கொடூரம்.. கர்ப்பமாக்கிய பட்டதாரி இளைஞர் எடுத்த விபரீத முடிவு
விழுப்புரம் மாவட்டம் செஞ்சியை அடுத்த போத்துவாய் கிராமத்தை சேர்ந்த 17 வயது சிறுமி பிளஸ் 2 படித்து முடித்துவிட்டு வீட்டில் இருந்து வந்துள்ளார். இந்நிலையில், சிறுமிக்கு கடந்த 2ம் தேதி திடீரென நேற்று வயிற்று வலியால் துடித்துள்ளார்.
சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து தாயாக்கிய வழக்கில் கைது செய்யப்படும் முன் பூச்சி மருந்து குடித்து தற்கொலைக்கு முயன்ற பட்டதாரி இளைஞர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
விழுப்புரம் மாவட்டம் செஞ்சியை அடுத்த போத்துவாய் கிராமத்தை சேர்ந்த 17 வயது சிறுமி பிளஸ் 2 படித்து முடித்துவிட்டு வீட்டில் இருந்து வந்துள்ளார். இந்நிலையில், சிறுமிக்கு கடந்த 2ம் தேதி திடீரென நேற்று வயிற்று வலியால் துடித்துள்ளார். இதனால், அதிர்ச்சியடைந்த பெற்றோர் ஆட்டோ மூலம் மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக சிறுமிக்கு ஆட்டோவிலே பெண் குழந்தை பிறந்துள்ளது.
இதையும் படிங்க;- ஃபர்ஸ்ட் நைட்டுக்கு சென்றதும்.. பல இடங்களில் கடித்துவைத்த மணமகன்.. அரைகுறை ஆடைகளுடன் புதுப்பெண் அலறல்.!
இதனையடுத்து அந்த சிறுமியும், குழந்தையும் திருவண்ணாமலை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். சிறுமிக்கு 17 வயதே ஆகிறது என்பதை அறிந்த மருத்துவர்கள் இதுகுறித்து காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். இதனையடுத்து மருத்துவமனைக்கு விரைந்த காவல்துறையினர் சிறுமியிடம் விசாரணை மேற்கொண்டனர்.
அப்போது, சிறுமி போத்துவாய் கிராமத்தைச் சேர்ந்த டேவிட் மகன் வின்சென்ட் (25) என்பவரை காதலித்து வந்துள்ளார். அந்த இளைஞர் திருமணம் செய்துக்கொள்வதாக கூறி சிறுமியிடம் ஆசைவார்த்தை கூறி அடிக்கடி உல்லாசமாக இருந்து வந்துள்ளார். இதன்காரணமாக சிறுமி கர்ப்பமடைந்துள்ளார். இதுகுறித்து சிறுமியின் தாய் அளித்த புகாரின் பேரில் செஞ்சி அனைத்து மகளிர் போலீசார் வின்சென்ட் மீது போக்சோ சட்டத்தில் கீழ் வழக்கு பதிவு செய்தனர்.
இதனையடுத்து, நல்லாண்பிள்ளை பெற்றாள் போலீசார் வின்சென்ட்டை போக்சோ சட்டத்தில் கைது செய்து அழைத்து வந்தனர். அப்போது, வின்சென்ட் வாந்தி எடுத்து சோர்வுடன் காணப்பட்டார். பின்னர், அவரிடம் விசாரணை நடத்தியதில் கைது செய்து விடுவார்கள் என பயந்து தற்கொலை செய்து கொள்ள பூச்சி மருந்து குடித்ததாக தெரிவித்தார். இதனால், அதிர்ச்சியடைந்த வின்சென்ட்டை திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதையும் படிங்க;- கண்ணை மறைத்த கள்ளக்காதல்.. தாலி கட்டிய புருஷனை போட்டு தள்ளிவிட்டு நாடகமாடிய 27 வயது இளம்பெண்..!