பள்ளி விடுமுறையில் தன் அக்கா மகளை வீட்டுக்கு அழைத்து வந்த அவரை விபச்சாரத்தில் தள்ளிய தாய்மாமனை போலீசார் கைது செய்துள்ளனர் .   அறையில் அடைத்து வைத்து கொடுமைப்படுத்திய நிலையில் அந்தப் பெண் தப்பித்து வந்து காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது .  பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது . இதை தடுக்க அரசும் காவல் துறையும் எத்தனையோ நடவடிக்கைகளை எடுத்து வந்தாலும் குற்றங்கள்  மட்டும் குறைந்தபாடில்லை .

 

குஜராத் மாநிலத்தில்  சொந்த அக்கா மகளையே தாய்மாமன்  பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய சம்பவம் அரங்கேறியுள்ளது.  உத்தரபிரதேச மாநிலத்தைச் சேர்நவர்   15 வயது சிறுமி , பள்ளி விடுமுறையில் இருந்த இவரை,  அவரை தாய்மாமன் வீட்டிற்கு அழைத்து வந்துள்ளார்.  இந் நிலையில் அந்த பெண் காவல் நிலையத்தில் தன் தாய்மாமன் மீது   புகார் ஒன்று தெரிவித்துள்ளார்.  அதில், தன்னை  வீட்டிற்கு அழைத்து வந்த தன் தாய்மாமன் சில நாட்கள் தான் கேட்டதையெல்லாம் வாங்கிக் கொடுத்து தன்னை வீட்டில் வைத்திருந்தார் ,  பின்னர்  சில நாட்கள் கழித்து அகமதாபாத் சோலார் என்ற பகுதியில் பாலியல் தொழில் செய்துவரும் அவரது மனைவியுடன் தன்னையும் பாலியல் தொழிலில் ஈடுபட கட்டாயப்படுத்தினார்.  

அத்துடன் அவர்கள் நடத்தும் ஸ்பாவில் தன்னை ஈடுபடத்தினர் , ஆனால் நான் அதற்கு ஒத்துக்கொள்ளாததால் என்னை வீட்டில்  சிறை  வைத்த அவர்கள்,  அங்கு  பாலியல் தொழில்லதன்னை  ஈடுபடுத்தினர்  என அந்த பெண் தெரிவித்துள்ளார் . இந்நிலையில்   அகமதாபாத்தில் பணிபுரியும் தனது சகோதரரை  கடந்த புதன்கிழமை தொலைபேசியில் தொடர்பு கொண்டு தகவலை கூறிய தான்,   அவரின் உதவியுடன் தன் தாய் மாமனிடமிருந்து  தப்பித்ததாகவும்,  மறுநாள் தன் சகோதரனுடன் இணைந்து  வாத்வா காவல் நிலையத்திற்கு புகார் அளித்ததாகவும் அந்தப் பெண்  தெரிவித்துள்ளார் . இந்நிலையில் தாய்மாமன் மீது விபச்சாரத்தில் ஈடுபடுத்தியது தொடர்பாக வழக்கு  பதிவு செய்த போலீசார் விசாரித்து வருகின்றனர்.