ராஜஸ்தானில் செங்கல் சூளையில் கருகிய நிலையில் சிறுமியின் உடல் மீட்பு... நெஞ்சை உலுக்கும் அதிர்ச்சி சம்பவம்
கொடூரக் கொலையால் ஆத்திரமடைந்த நூற்றுக்கணக்கான கிராம மக்கள் சம்பவ இடத்தில் திரண்டு, குற்றவாளிகளை விரைவில் கைது செய்ய வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ராஜஸ்தானில் தேர்தலுக்கு சில மாதங்களே உள்ள நிலையில் 14 வயது சிறுமியின் கொடூரமான கொலை அந்த மாநிலத்தில் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியுள்ளது.
பில்வாராவில் உள்ள செங்கல் சூளையில் எரிந்த நிலையில் சிறுமியின் சடலம் புதன்கிழமை கண்டெடுக்கப்பட்டது. அந்தச் சிறுமி தனது தாயுடன் ஆடு மேய்க்க சென்றதாவும், சில மணிநேரங்களுக்குப் பிறகு, அவர் தனது தாயிடமிருந்து பிரிந்து காணாமல் போனதாகவும் கூறப்படுகிறது.
குடும்பத்தினர் மற்றும் கிராம மக்கள் சிறுமி திரும்பி வராத சிறுமியை தேடி இரவு முழுவதும் அலைந்துள்ளனர். வியாழக்கிழமை அதிகாலையில் வீட்டிற்கு அருகிலுள்ள ஒரு செங்கல் சூளையில் சிறுமி சடலமாகக் கிடப்பதைக் கண்டுள்ளனர். எரிந்துகொண்டிருந்த நெருப்பில் இருந்து எலும்புகள், வெள்ளி கொலுசு மற்றும் காலணிகளை போலீசார் கண்டுபிடித்தனர்.
சிறுமி கொலை செய்யப்படுவதற்கு முன்பு கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதாக போலீசார் சந்தேகிக்கின்றனர். சம்பவ இடத்தில் பிடிபட்ட உள்ளூர் ஆட்கள் 3 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்தியப் பொருளாதாரம் சிறப்பாக இருக்கும்... சீனாவுக்கு சரிவுதான்! மார்கன் ஸ்டான்லி நிறுவனம் கணிப்பு
இந்தக் கொடூரக் கொலையால் ஆத்திரமடைந்த நூற்றுக்கணக்கான கிராம மக்கள் சம்பவ இடத்தில் திரண்டு, குற்றவாளிகளை விரைவில் கைது செய்ய வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும், சிறுமி காணாமல் போனது குறித்த புகாருக்கு போலீசார் தாமதமாக பதிலளித்ததாகவும், சிறுமியின் அடையாளச் சான்று மற்றும் பிறப்புச் சான்றிதழைக் கேட்டதாகவும் அவர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
இந்த ஆண்டு இறுதியில் ராஜஸ்தானில் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், ராஜஸ்தானில் அண்மைக் காலத்தில் பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்து வருவதாகக் கூறி, ஆளும் முதல்வர் அசோக் கெலாட் தலைமையிலான காங்கிரஸ் அரசை பாஜக விமர்சித்து வருகிறது.
ஹரியானாவில் பதற்றம்... இரவில் 2 மசூதிகள் மீது குண்டு வீசிச் சென்ற மர்ம நபர்கள்!
ஜூலை 14 அன்று, கவுரலியில் ஒரு சிறுமி சுட்டுக்கொலை செய்யப்பட்டு, உடலில் ஆசிட் ஊற்றப்பட்டு கிணற்றில் ஏறியப்பட்டிருந்தார். தங்கள் புகாருக்கு போலீசார் நடவடிக்கை எடுக்கவில்லை என சிறுமியின் குடும்பத்தினர் தெரிவித்தனர்.
அடுத்த மூன்று நாட்களுக்குப் பிறகு ஜோத்பூரில், பல்கலைக்கழக வளாகத்தில் ஒரு சிறுமி கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதாகத் தகவல் வெளியானது. ஜோத்பூரில், ஜூலை 19 அன்று, ஒரு குழந்தை உட்பட ஒரு குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் கொல்லப்பட்டனர். அவர்களின் உடல்கள் தீ வைத்து எரிக்கப்பட்டன.
பாஜக ஆளும் உத்தரப் பிரதேசம் மற்றும் மத்தியப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் தான் பெண்களுக்கு எதிரான கொலைகள் மற்றும் குற்றங்கள் அதிகம் நடைபெறுவதா முதல்வர் அசோக் கெலாட் விமர்சகர்களுக்கு பதிலடி கொடுத்துள்ளார். தேசிய குற்ற ஆவணக் காப்பகத்தின் தரவுகளின்படி, பெண்களுக்கு எதிரான குற்றத்தில் அசாம், டெல்லி மற்றும் ஹரியானா ஆகிய மாநிலங்கள் முன்னிலையில் உள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.