ஹரியானாவில் பதற்றம்... இரவில் 2 மசூதிகள் மீது குண்டு வீசிச் சென்ற மர்ம நபர்கள்!
ஹரியானாவின் நூஹ் மாவட்டத்தில் புதன்கிழமை 11.30 மணியளவில் பைக்கில் வந்த மர்ம நபர்கள் இரண்டு மசூதிகள் மீது குண்டு வீசிச் சென்றுள்ளனர்.
ஹரியானா மாநிலம் நூஹ் மாவட்டத்தில் உள்ள டவுருவில் உள்ள இரண்டு மசூதிகள் மீது மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர்கள் நேற்று இரவு குண்டு வீசியதாக போலீசார் தெரிவித்துள்ளனர். புதன்கிழமை இரவு 11.30 மணியளவில் இடம்பெற்ற இந்தச் சம்பவத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை எனவும் போலீசார் கூறியுள்ளனர்.
மசூதிகளில் ஒன்று விஜய் சௌக் அருகிலும், மற்றொன்று காவல் நிலையத்திற்கு அருகிலும் அமைந்துள்ளது. இரண்டு மசூதிகளும் குண்டுவீச்சில் சிறிது சேதம் அடைந்துள்ளன. இந்தச் சம்பவம் குறித்து தகவல் கிடைத்ததும், தீயணைப்புப் படையினர் இரண்டு மசூதிகளுக்கும் விரைந்து சென்று தீயை அணைத்தனர்.
பல்வால் மாவட்டத்தில் உள்ள மினார் கேட் சந்தையில் உள்ள ஒரு வளையல் கடையும் அடையாளம் தெரியாத ஆசாமிகளால் தீ வைத்து எரிக்கப்பட்டது.
ஹரியானா வன்முறை மிக துரதிர்ஷ்டவசமானது: முதல்வர் மனோகர் லால் கட்டார் வேதனை
திங்கட்கிழமை நுஹ் மாவட்டத்தில் விஸ்வ ஹிந்து பரிஷத் ஊர்வலத்தை ஒரு கும்பல் தடுக்க முயன்றதைத் தொடர்ந்து, இரு தரப்புகளுக்கும் இடையே வன்முறை மூண்டது. நுஹ் மற்றும் பல்வால் ஆகிய இரு மாவட்டங்களிலும் ஊரடங்கு தடை உத்தரவு அறிவிக்கப்பட்டுள்ளது.
நூஹில் தொடங்கிய வன்முறை செவ்வாயன்று அண்டை மாநிலமான குருகிராமிலும் பரவியது. வன்முறை கும்பல் இமாம் ஒருவரைக் கொன்று, உணவகத்திற்கு தீ வைத்தது. கடைகளையும் சேதப்படுத்தியது.
ஹரியானாவில் நடந்த வன்முறையில் இதுவரை 6 பேர் உயிரிழந்துள்ளனர். 116 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 90 காவலில் வைக்கப்பட்டுள்ளனர் என்று மாநில அரசு தெரிவித்துள்ளது.
தங்கம் விற்பனை 7 சதவீதம் சரிவு! நகை வாங்க ஆர்வம் குறைந்தது ஏன்? உலக தங்க கவுன்சில் தகவல்