பெற்றோரின் திட்டுக்கு பயம்... கையை பிளேடால் கீறி போலி பாலியல் புகார் கூறிய சிறுமி!

டெல்லியில் சமூக அறிவியல் தேர்வைச் சரியாக எழுதாததால் பெற்றோரின் ஏச்சுக்கு அஞ்சி, பொய்யான பாலியல் புகார் கூறிய சிறுமி பின்னர் தன் தவறை ஒப்புக்கொண்டார்.

14-year-old Delhi girl cooks up false story of molestation to escape parents' scolding

தேர்வை சரியாக எழுததற்கு பெற்றோரிடம் திட்டு வாங்க பயந்து, 14 வயது சிறுமி தான் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளானதாக பொய்யான குற்றச்சாட்டுகளை இட்டுக்கட்டிக் கூறி இருக்கிறார்.

சிறுமி தான் பொய் சொன்னதை ஒப்புக்கொண்டதால், சிறுமியின் குற்றசாட்டுகளின் அடிப்படையில் போக்சோ சட்டம் மற்றும் இந்திய தண்டனைச் சட்டத்தின் தொடர்புடைய பிரிவுகளின் கீழ் பாலியல் வன்கொடுமை வழக்கு பதிவு செய்த போலீசார், அந்த வழக்கை வழக்கை வாபஸ் பெற்றனர்.

இந்தச் சம்பவம் தலைநகர் டெல்லியின் வடகிழக்கு பகுதியில் நடந்துள்ளனது. இது தொடர்பாக பஜன்புரா காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டதாக போலீசார் கூறுகின்றனர்.

பள்ளி முடிந்ததும், தன்னுடன் மூன்று சிறுவர்கள் தகராறில் ஈடுபட்டதாகவும், தன்னை சில மீட்டர் தூரம் இழுத்துச் சென்று கைகளில் காயம் ஏற்படுத்தி காயப்படுத்தியதாகவும் சிறுமி குற்றம் சாட்டியுள்ளார். சிறுமியின் இந்தப் புகாரின் அடிப்படையில், வழக்குப்பதிவு செய்யப்பட்டு போலீசார் விசாரணை நடத்தினர்.

என்னது... தகுதி உள்ளவங்களுக்கு மட்டுமா? அனைத்து மகளிருக்கும் ரூ.29,000 கொடுங்க! அண்ணாமலை அதிரடி

"சிசிடிவி காட்சிகளைப் பார்வையிட்டபோது, குழந்தை தனியாக சுற்றித் திரிவதைக் கண்டோம். பின்னர் நாங்கள் குழந்தைக்கு அறிவுரை வழங்கினோம். பெண் காவலர்கள் சிறுமியிடம் பேசினார்கள். இறுதியாக, மார்ச் 15ஆம் தேதி அந்தச் சிறுமி உண்மையைச் சொல்லிவிட்டார்." என துணை போலீஸ் கமிஷனர் (வடகிழக்கு) ஜாய் டிர்கி தெரிவிக்கிறார்.

"அன்று சமூக அறிவியல் தேர்வு. சிறுமி தேர்வை சரியாக எழுதவில்லை. இதனால் பெற்றோர் திட்டுவார்கள் என்று பயம் ஏற்பட்டிருக்கிறது. இதனால் பள்ளிக்கு அருகில் உள்ள ஒரு கடைக்குச் சென்ற சிறுமி, தின்பண்டங்களுடன் பிளேட்டையும் சேர்த்து வாங்கி இருக்கிறார். பின் தன்னைத்தானே பிளேடால் காயப்படுத்தி இருக்கிறார்" எனவும் கமிஷனர் ஜாய் கூறுகிறார்.

சிறுமி உண்மையை வெளிப்படுத்திய பிறகு, நீதிபதியிடம் அழைத்துச் செல்லப்பட்டு அவரது வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டது. அப்போது சிறுமி, தன்னைத் துன்புறுத்தியதாக பொய்யான குற்றச்சாட்டுகளை முன்வைத்ததாக ஒப்புக்கொண்டார். அவரது இந்த வாக்குமூலத்தின் அடிப்படையில் வழக்கு ரத்து செய்யப்பட்டது என போலீசார் கூறுகின்றனர்.

ரயில் நிலைய டிவியில் பட்டப்பகலில் ஆபாச வீடியோ ஒளிபரப்பானதால் அதிர்ச்சி!

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios