சென்னையில் இன்ஸ்டா காதல் மூலம் 13 வயது சிறுமியை கற்பழித்த 17வயது சிறுவன்
சென்னையில் இன்ஸ்டாகிராம் மூலம் பழக்கம் ஏற்பட்ட 13 வயது சிறுமியை வீட்டிற்கு அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்த 17 வயது சிறுனிடம் காவல் துறையினா் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சென்னை அயனாவரம் பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவர் வீட்டில் இருந்த 13 வயது மகளை காணவில்லை என்று காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதனைத் தொடர்ந்து காவல் துறையினர் சிறுமியின் செல்போன் எண்ணை தொடர்பு கொண்டு பேசினர். எதிர் தரப்பில் பேசிய ஆண் நபர் சிறுமியை அயனாவரம் பேருந்து நிலையத்தில் விட்டுச் செல்வதாக தெரிவித்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து விரைந்து சென்று சிறுமியை மீட்ட காவல் துறையினர் அவரிடம் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் வியாசர் பாடியைச் சேர்ந்த 17 வயது சிறுவன் சிறுமியை வீட்டிற்கு அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்தது தெரியவந்தது. மேலும் சிறுமிக்கும், சிறுவனுக்கும் இடையே எவ்வித தொடர்பும் இல்லாத நிலையில் இன்ஸ்டா கிராம் பக்கத்தின் மூலமாக இருவருக்கும் நட்பு ஏற்பட்டுள்ளதையும், இதன் மூலம் சிறுமி அந்த சிறுவனை நம்பி சென்றதையும் கண்டு பிடித்தனர்.
12ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதாதவர்களுக்கு ஜூன் மாதமே மறு வாய்ப்பு - அமைச்சர் அறிவிப்பு
அதன் பின்னர், சிறுமியை வன்கொடுமை செய்த சிறுவனை கைது செய்த காவல் துறையினர் அவனிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் சிறுமிக்கு தகுந்த அறிவுரைகளை வழங்கி அவரது பெற்றோருடன் அனுப்பி வைத்தனர்.