உத்தரப்பிரதேச மாநிலத்தில் இரண்டு  சகோதரிகளின் புகைப்படங்களை ஆபாசமாக மார்பிங் செய்து டிக்டாக்கில் வெளியீட பன்னிரண்டாம் வகுப்பு மாணவனை போலீசார் கைது செய்துள்ளனர்.  அது மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.  உத்தரபிரதேச மாநிலம் அசாம்கர் பகுதியை சேர்ந்தவர்கள் அந்த இரண்டு  சகோதரிகள் இவர்கள் சமீபத்தில்  காவல் நிலையத்தில் புகார் ஒன்று  அளித்தனர். 

 அதில்,  தங்கள் புகைப்படங்களை மிக மோசமாக மார்பிங் செய்து யாரோ ஒருவர் டிக்டாக்கில் வெளியிட்டுள்ளனர்.  உடனே அந்த வீடியோவை நீக்க வேண்டும் எனவும்.  மார்பிங் செய்த நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் புகார் மனுவில் தெரிவித்திருந்தனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்த  போலீசார்,  அப்புகைப்படங்களை மார்பிங் செய்த நபரை இறுதியில் கண்டுபிடித்தனர். அதில்  அதே பகுதியை சேர்ந்த பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்தான் அப்படி செய்துள்ளார் என்பது உறுதியானது. அதனையடுத்து  அந்த மாணவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தினர்.  அதில் உறவினர் ஒருவரின் திருமண நிகழ்ச்சியின் போது அவ்விரு பெண்களையும் பார்த்ததாக அவர் தெரிவித்துள்ளார். 

அவர்களை பார்த்தவுடன் அவர்களின் புகைப்படங்களை மார்பிங் செய்து அதை  ட்விட்டர்  தளத்தில் வெளியிட்ட திட்டமிட்டதாக தெரிவித்துள்ளார். அத்துடன் அதற்காக போலியான பேஸ்புக் கணக்கை துவங்கியதுடன்   போலியான ட்விட்டர் கணக்கை உருவாக்கியதாகவும்   மாணவர் தெரிவித்துள்ளார்.  பன்னிரெண்டாம் வகுப்பு மாணவர் இந்த சகோதரிகளின் புகைப்படத்தை மார்பிங் செய்து ஆபாசமாக வெளியிட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.