அண்மையில் வெளியான குரூப் 4 தேர்வு முடிவுகளில் முறைகேடுகள் நடந்திருப்பதாக புகார் எழுந்தன. ராமேஸ்வரம் மற்றும் கீழக்கரை தேர்வு மையங்களில் தேர்வு எழுதியவர்களில் சிலர் இடைத்தரகர்கள் உதவியுடன் மறையக்கூடிய மையினால் தேர்வு எழுதியது விசாரணையில் தெரிய வந்தது. முறைகேட்டில் ஈடுபட்ட 39 தேர்வாளர்கள் முதல் 100 இடங்களுக்குள் வந்துள்ளனர்.

இதையடுத்து 99 தேர்வாளர்களை தகுதி நீக்கம் செய்த தேர்வாணையம் அவர்களை வாழ்நாள் முழுவதும் தேர்வு எழுதவும் தடை விதித்து அதிரடி உத்தரவு பிறப்பித்தது. ஏற்கனவே தேர்வான 39 பேர்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டதை அடுத்து புதியதாக 39 பேர் தேர்வு செய்யப்பட்டு அவர்கள் சான்றிதழ் சரிபார்ப்பிற்கு அழைக்கப்பட்டுள்ளனர். இதனிடையே தேர்வாளர்கள் முறைகேட்டில் ஈடுபட்டதற்கு உடந்தையாக இருந்த அதிகாரிகள், இடைத்தரகர்கள் ஆகியோர் கைது செய்யப்பட்டு வருகின்றனர்.

ஏற்கனவே 9 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்னர். அவர்களிடம் விசாரணை நடந்து வருகிறது. இந்தநிலையில் தற்போது மேலும் மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இடைத்தரகர்களாக  செயல்பட்டதாக அவர்கள் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இதனிடையே சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் 3 அரசு ஊழியர்கள் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

Also Read: பிரபல தொழிலதிபர் வீட்டில் கொள்ளை..! 100 சவரன் நகை அபேஸ்..!