100 வயது மூதாட்டியை, 20 வயது இளைஞர் ஒருவர் மது போதையில் பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேற்கு வங்க மாநிலம் நாடியா மாவட்டத்தில் உள்ள சக்தனா பகுதியை சேர்ந்த மூதாட்டி ஒருவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு தான் 100வது பிறந்தநாளை கொண்டாடினார். இந்த நிலையில் வீட்டில் தனி அறையில் தூங்கிக் கொண்டிருந்த மூதாட்டி வித்தியாசமாக சத்தம் போடுவதை கண்ட பேத்தி ஒருவர் ஜன்னல் வழியாக எட்டி பார்த்துள்ளார். அப்போது அவர் கண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

அதாவது, தனியறையில் படுத்திருந்த மூதாட்டியை இளைஞர் ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்ததைக் கண்ட பேத்தி, உடனடியாக சத்தம் போட்டு வீட்டில் இருப்பவர்களையும் அக்கம்பக்கத்தினரையும் வரவழைத்தார். உடனடியாக அங்கத்தவர்கள் இளைஞரை பிடித்து நையப் புடைத்தனர். தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் இளைஞரை பிடித்து விசாரித்த போது தான் தெரிந்தது அவருக்கு வயது வெறும் 20 தான் என. பிறகு அவரது போதையை தெரிவித்த போலீசார் தொடர்ந்து நடத்திய விசாரணையில், குடிபோதையில் இருந்ததால் என்ன செய்கிறோம் என அறியாமல் மூதாட்டியை பாலியல் பலாத்காரம் செய்ததை ஒப்புக்கொண்டார். 

இதையடுத்து 20 வயது இளைஞரை கைது செய்த போலீசார், அவரை கல்யாணி குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இதனிடையே பாலியல் பலாத்காரத்தால் பாதிக்கப்பட்ட நூறு வயது மூதாட்டியை மருத்துவமனையில் அனுமதித்த போலீசார், அவரிடம் வாக்குமூலம் பெற முயற்சித்து வருகின்றனர்.