TN Corona: தமிழகத்தில் ஒருநாள் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 150க்கும் கீழ் குறைந்துள்ளது. அந்த வகையில் தமிழ்நாட்டில் இன்று ஒரே நாளில் 129 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

தமிழகத்தில் ஒருநாள் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 150க்கும் கீழ் குறைந்துள்ளது. அந்த வகையில் தமிழ்நாட்டில் இன்று ஒரே நாளில் 129 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நேற்று ஒரு நாள் பாதிப்பு 147 ஆக இருந்த நிலையில் இன்றைய கொரோனா உறுதியானவர்களின் எண்ணிக்கை 129 ஆக குறைந்துள்ளது. 42,026 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்ட நிலையில் ஒருநாள் கொரோனா பாதிப்பு 129 ஆக உள்ளது. சென்னையில் மட்டும் 44 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

மேலும் படிக்க: India Corona: கொரோனா நிலவரம்… இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 4,184 பேருக்கு தொற்று!!

சென்னையில் ஏற்கனவே 47 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் இன்று கொரோனா எண்ணிக்கை 44 ஆக குறைந்துள்ளது. தமிழகத்தில் இன்று 2 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். கொரோனாவால் இன்று 2 பேர் உயிரிழந்துள்ளதை அடுத்து உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 38,023 ஆக உள்ளது. கொரோனாவுக்கு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 1,676 ஆக உள்ளது. கொரோனா தொற்றிலிருந்து மேலும் 354 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதன் மூலம் குணமடைந்தோர் எண்ணிக்கை 34,11,899 ஆக உள்ளது. 

மேலும் படிக்க: Corona: புதிய வைரஸ் தொற்று..தீவிரமாக்கப்படுமா ஊரடங்கு..? கட்டுப்பாடுகள் அதிகரிக்க வாய்ப்பு.. வெளியான தகவல்..

மாவட்ட வாரியாக , அரியலூர் 0, செங்கல்பட்டு 13, சென்னை 44, கோயம்புத்தூர் 15, கடலூர் 2, தர்மபுரி 1, திண்டுக்கல் 1, ஈரோடு 2, கள்ளக்குறிச்சி 0, காஞ்சிபுரம் 6, கன்னியாகுமரி 3, கரூர் 0, கிருஷ்ணகிரி 1, மதுரை 2, மயிலாடுதுறை 0, நாகப்பட்டிணம் 0, நாமக்கல் 0, நீலகிரி 8, பெரம்பலூர் 0, புதுகோட்டை 1, ராமநாதபுரம் 1, ராணிப்பேட்டை 1, சேலம் 2, சிவகங்கை 1, தென்காசி 2, தஞ்சாவூர் 2, தேனி 0, திருப்பத்தூர் 1, திருவள்ளூர் 4, திருவண்ணாமலை 1, திருவாரூர் 0, தூத்துக்குடி 1, திருநெல்வேலி 1, திருப்பூர் 4, திருச்சி 3, வேலூர் 5, விழுப்புரம் 0, விருதுநகர் 1 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.