Corona : மீண்டும் அதிகரிக்கும் கொரோனா.. ஒரே நாளில் 8 ஆயிரம் பேருக்கு பாதிப்பு.. இன்றைய பாதிப்பு நிலவரம் !
Corona india : சில வாரங்களாக டெல்லி, மகாராஷ்டிரா, பஞ்சாப், ஹரியானா உள்ளிட்ட மாநிலங்களில் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது.
கொரோனா வைரஸ்
இந்தியாவில் கொரோனா நோயாளிகள் எண்ணிக்கை தற்போது சற்றே அதிகரித்து வரும் நிலையில், இது பெருந்தொற்றின் 4-வது அலையா என்ற கேள்வி எழுந்து உள்ளது. கொரோனா மூன்றாவது அலை கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஓய்ந்த நிலையில், சில வாரங்களாக டெல்லி, மகாராஷ்டிரா, பஞ்சாப், ஹரியானா உள்ளிட்ட மாநிலங்களில் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. இதனால் நாட்டில் விரைவில் கொரோனா 4-வது அலை பரவக்கூடும் என தகவல்கள் வெளியாகி வருகின்றது.
மத்திய அரசு எச்சரிக்கை
நாட்டில் அண்மைகாலமாக கேரளா, மராட்டியம் உள்ளிட்ட சில மாநிலங்களில் கொரோனா தொற்று பரவல் அதிகரித்து வருகிறது.இந்நிலையில் மத்திய சுகாதாரத் துறை செயலர் ராஜேஷ் பூஷன், மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேச அரசுகளுக்கு கொரோனா பரவலை கட்டுப்படுத்துதல் தொடர்பாக எழுதியுள்ள கடிதத்தில், கொரோனா தொற்று சில மாநிலங்களில் அதிகரித்து வருவது குறித்து தனது கவலை அளிக்கிறது. எனவே , கொரோனா நோய்த்தொற்றை உடனடி மற்றும் திறம்பட கட்டுப்படுத்த தேவையான நடவடிக்கைகளை தொடர்ந்து செயல்படுத்துவதுடன் அதை கண்காணிக்க வேண்டும்.
குறிப்பாக பரிசோதனை, கண்காணித்தல், சிகிச்சை, தடுப்பூசி போடுதல் மற்றும் கொரோனா தடுப்பு உள்ளிட்ட ஐந்து கட்ட பார்முலாவை பின்பற்றும் போது, சுகாதார அமைச்சகம் வழங்கிய ஆலோசனைகளை உறுதி செய்ய வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு 8 ஆயிரத்தை நெருங்குகிறது. மொத்த பாதிப்பு எண்ணிக்கை 4 கோடியை தாண்டி உள்ளது.
கொரோனா பாதிப்பு
கடந்த 7 ஆம் தேதி பாதிப்பு எண்ணிக்கை 3,714 ஆக இருந்த நிலையில், கடந்த 8 ஆம் தேதி அது 5,233 ஆக அதிகரித்தது. இந்த நிலையில் நேற்று ( ஜூன் 9 ) சற்றும் எதிராபாத விதமாக பாதிப்பு 7 ஆயிரத்தைக் கடந்து , மொத்தமாக 7,240 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்படிருந்தது. தொடர்ந்து கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் 7,584 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது. இதன் மூலம் இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கபட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 4 கோடியே 32 லட்சத்து 5 ஆயிரத்து 106 ஆக அதிகரித்துள்ளது.
அதேபோல் நேற்றைய தினம் தொற்று பாதிப்புக்கு ஆளாகி 8 பேர் உயிரிழந்திருந்த நிலையில் , கடந்த 24 மணி நேரத்தில் 24 பேர் கொரோனா தொற்றுக்கு பலியாகியிருக்கின்றனர். இதனால் கொரோனாவால் ஏற்பட்ட மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 5,24,747 ஆக அதிகரித்துள்ளது.கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா பாதித்த 3,791 பேர் குணமடைந்த நிலையில் , கொரோனாவிலிருந்து மொத்தம் குணமடைந்தோர் எண்ணிக்கை 4,26,44,092 ஆக உயர்ந்துள்ளது. தற்போது வரை இந்தியாவில் 36,267 பேர் கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதையும் படிங்க : ”அந்த அரை போதை அரசியல் தலைவருக்கு சொல்கிறேன்..” அண்ணாமலையை மறைமுகமாக கலாய்த்த ஐ.லியோனி!
இதையும் படிங்க : G Square : ஜி ஸ்கொயர் விவகாரத்தில் இதுதான் நடந்தது.. உண்மையை போட்டு உடைத்த அமைச்சர் முத்துசாமி !