Asianet News TamilAsianet News Tamil

சற்று குறைந்த கொரோனா.. இன்று ஒரே நாளில் 16,103 பேருக்கு தொற்று .. இன்றைய பாதிப்பு நிலவரம்..

India corona : கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில்  16,103 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 
 

India corona cases today - 16,103 corona case positive in last 24 hrs
Author
India, First Published Jul 3, 2022, 10:14 AM IST

இதுக்குறித்து மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள தகவலின் படி, கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் 16,103 பேருக்கு கொரோனா தொற்று பதிவாகியுள்ளது. நேற்று 17,092 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், இன்று 16,103 ஆக சற்று குறைந்துள்ளது. நாடு முழுவதும் இதுவரை இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கபட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 4,34,69,234 ஆக அதிகரித்துள்ளது. 

மேலும் படிக்க:தமிழகத்தில் தாறுமாறாக அதிகரிக்கும் கொரோனா..இன்றைய பாதிப்பு நிலவரம் !

கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா தொற்றிலிருந்து 13,929  பேர் குணமடைந்துள்ளனர். இதனால் இதுவரை கொரோனாவிலிருந்து குணமடைந்தோர் மொத்த எண்ணிக்கை 4,28,65,519 ஆக உள்ளது. இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் இருப்போர் எண்ணிக்கை, 1,11,711 ஆக அதிகரித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் 31 பேர் உயிரிழந்துள்ளனர். நாட்டில் இதுவரை கொரோனாவிற்கு பலியானவர்களின் எண்ணிக்கை 5,25,199 ஆக உயர்ந்துள்ளது.இந்தியாவில் 197.95 கோடி கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. நேற்று ஒரே நாளில் 10,10,652 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

மேலும் படிக்க:தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரிக்கும் கொரோனா… 2,500-ஐ நெருங்கும் தினசரி பாதிப்பு!!

Follow Us:
Download App:
  • android
  • ios