அதிகரிக்கும் கொரோனா.. மத்திய அரசு போட்ட அதிரடி உத்தரவு !
இந்தியா முழுவதும் அதிகரிக்கும் கொரோனாவால் மத்திய அரசு மாநில அரசுகளுக்கு புதிய உத்தரவை பிறப்பித்துள்ளது.
ஓமிக்ரான் கொரோனா கடந்த ஆண்டு இறுதியில் உலகில் பல நாடுகளில் கொரோனா அலையை ஏற்படுத்தி இருந்தது. அதன் பின்னர் பல நாடுகளிலும் வைரஸ் பாதிப்பு தொடர்ந்து குறைந்து வந்தது.உலகின் பல நாடுகளிலும் வைரஸ் பாதிப்பு மீண்டும் உயரத் தொடங்கி உள்ளது.
இது இந்தியாவில் அடுத்த அலையை ஏற்படுத்துமோ என்ற அச்சமும் பொதுமக்களிடையே ஏற்பட்டுள்ளது. இந்தியாவில் புதிய கொரோனா பாதிப்பு நேற்றை விட இன்று 32.3% அதிகரித்துள்ளது. கேரளா, மேற்கு வங்காளம், தமிழ்நாடு, மகாராஷ்டிரா, அசாம், ஆந்திரப் பிரதேசம், இமாச்சலப் பிரதேசம், மிசோரம் உள்ளிட்ட 9 மாநிலங்களில் அதிகரிக்கும் கொரோனா தொற்றை கட்டுப்படுவதற்கான உயர்மட்டக் கூட்டம் மத்திய சுகாதாரச் செயலாளர் ராஜேஷ் பூஷன் தலைமையில் இன்று நடைபெற்றது.
மேலும் செய்திகளுக்கு..போக்குவரத்து ஊழியர்கள் ஸ்ட்ரைக் அறிவிப்பு.! எப்போது தெரியுமா ?
இதையடுத்து கொரோனாவால் பாதிக்கப்பட்டு வீட்டில் தனிமையில் இருப்பவர்களை கண்காணிக்கவும் நோயை சரியான நேரத்தில் கண்டறிய ரேபிட் ஆன்டிஜென் சோதனை மேற்கொள்வது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவும் மாநில அரசுகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா தொற்றிலிருந்து 18,517 பேர் குணமடைந்துள்ளனர்.
இதனால் இதுவரை கொரோனாவிலிருந்து குணமடைந்தோர் மொத்த எண்ணிக்கை 4,31,32,140 ஆக உள்ளது. இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் இருப்போர் எண்ணிக்கை 1,43,091 ஆக அதிகரித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் 2,603 பேர் உயிரிழந்துள்ளனர். நாட்டில் இதுவரை கொரோனாவிற்கு பலியானவர்களின் எண்ணிக்கை 5,28,388 ஆக உயர்ந்துள்ளது. நாட்டில் கொரோனா உயிரிழப்பின் விகிதம் 1.20 % ஆக உள்ளது.
மேலும் செய்திகளுக்கு..பள்ளியில் மயங்கி விழுந்த ஸ்ரீமதி.. பரபரப்பான சிசிடிவி காட்சிகள் வெளியீடு !