காமெடி நடிகர் யோகிபாபு, கதையின் நாயகனாக நடித்துள்ள 'ஜோம்பி' பட டீசர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. 

நடிகை யாஷிகா ஆனந்த்,  கவர்ச்சிக்கு தடை போடாமல் தாராளம் காட்டி உள்ளார் என்பது டீசரில் இருந்தே தெரிகிறது. யூடியூப் பிரபலம் சுதாகர் - கோபியின் காமெடியும் கவனிக்க வைக்கிறது.

ரத்தக்கறை கால்தடங்களுடன் ஆரம்பமாகும் ஜாம்பி படத்தின் டீசரில்,  யோகிபாபு தாதாவாக வந்து காமெடி காட்சியை கலை வைக்கிறார்.    

பல்வேறு துறைகளை சேர்ந்த இவர்கள் ஒரு கிளப்பில் சந்திக்கும் போது, ஜோம்பி பேய்கள் அனைவரையும் தாக்க துவங்குகிறது. அந்த பேய்களிடம் இருந்து இவர்கள் எப்படி தப்பிக்கிறார்கள். அதற்காக எந்த விதமான முறைகளை கையாளுகிறார்கள் என்பதை காமெடியாக இயக்கியுள்ளார் இயக்குனர் புவன் நல்லன்.

இந்த படத்தின் டீசர் முதல் முறையாக ஜோம்பியை வைத்து தமிழில் எடுக்கப்பட்ட, 'மிருதன்' படத்தில் நடித்த நாயகன் ஜெயம் ரவி வெளியிட்டுள்ளார்.