தரமான கதைகள், மற்றும் கதாநாயகனாக நடித்து, முன்னணி இடத்தை பிடிக்க வேண்டும் என போராடிக்கொண்டிருக்கும் நடிகர் நந்தா ஹீரோவாக மீண்டும் நடித்து வரும் திரைப்படம் 'ழகரம்'. தமிழுக்கு மட்டுமே சிறப்பு எழுத்தாக இருக்கும் 'ழ' எழுத்தில் டைட்டிலாக கொண்ட இந்த படம் ஒரு புதையலை  தேடும் ஒரு இளைஞர் கூட்டம் சந்திக்கும் பிரச்னையை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ளது. 

'ழகரம்' படத்தின் டிரைலர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. 'தமிழ் மட்டும் வெள்ளக்காரன் மொழியா இருந்திருந்தா இந்நேரம் இந்த மொழியை உலகம் முழுவதும் பேச வைத்திருப்பான்' என்ற வசனம் தமிழின் சிறப்பை எடுத்து கூறுகின்றது.

உலகம் முழுவதும் புகழ் பெற்ற  ப்ராஜெக்ட் ஃ’ என்ற நாவலின்  தழுவலில் உருவாகியுள்ள இந்த படம் ஒரு அதிசயப் புதையலை தேடிச் செல்லும் 21ம் நூற்றாண்டு இளைஞர்களின் சாகசக் கதையை மையமாகக் கொண்டது. இந்த படத்தின் படப்பிடிப்பு தமிழகத்தின் வரலாற்று சின்னங்கள் அதிகம் உள்ள மகாபலிபுரம், தஞ்சை, கோவை போன்ற இடங்களில் படமாக்கப்பட்டுள்ளது.

தரண்குமார் இசையில், அறிமுக இயக்குனர் க்ரிஷ் இயக்கத்தில் ஜோ பிரின்ஸ்தாஸ் ஒளிப்பதிவில் வெங்கட் லட்சுமணன் படத்தொகுப்பில் உருவாகி வரும் இந்த படத்தை கதீர் பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது.

இந்த படத்தின் டிரைலர் இதோ: