யுவன்ஷங்கர் ராஜா:

முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவரான யுவன்ஷங்கர் ராஜா பொதுவாக பட விழாக்களில் கூட அதிகம் பேச மாட்டார். அதனால் இவர் மிகவும் அமைதியானவர், கோபப்படமாட்டார் என்று தான் அனைரும் அறிந்திருக்கின்றனர். 

மனைவி கூறிய தகவல்:

ஆனால் யுவன்ஷங்கர் ராஜா வெளியில் உள்ளது போல் வீட்டில் இருக்க மாட்டார். அவருக்கு மறு முகம் ஒன்று உள்ளது என கூறியுள்ளார் யுவன்ஷங்கர் ராஜாவின் மனைவி ஜாப்ரூன் நிஷார். 

யுவன் அமைதியானவர் போல் வெளியில் தன்னைக் காட்டிக்கொண்டாலும் அவர் வீட்டில் பல செல்ல சேட்டைகள் செய்வார். மேலும் பல குரலில் மிமிக்கிரி செய்து அசத்துவார். 

வீட்டில் அவர் இருக்கும்போது நான் ஜாக்கிரதையாக தான் இருப்பேன் இல்லையென்றால் என்னை கிண்டல் செய்து வெறுப்பேற்றி ஒரு வழி செய்துவிடுவார். 

தன்னுடைய மகளுடன் விளையாடும் போது குழந்தையாகவே மாறி விடுவார் யுவன் என்று கூறியுள்ள அவருடைய மனைவி ஜாப்ரூன் தற்போது பிக் பாஸ் ரைசா நடித்து வரும் 'பியார் பிரேமா காதல்' படத்தின் காஸ்டியூம் டிசைனராக பணியாற்றி வருகிறாராம். இந்த படத்தை யுவன்ஷங்கர் ராஜா தயாரித்து வருவது குறிப்பிடத்தக்கது.