தமிழ் சினிமாவின் அடுத்த உச்சக்கட்ட எதிர்பார்ப்பிலுள்ள அஜீத்தின் ‘நேர்கொண்ட பார்வை’ படம் குறித்த  அப்டேட்களுக்காக ரசிகர்கள் ஏங்கித் தவித்துக்கொண்டிருக்கும் நிலையில் படம் குறித்த முக்கிய தகவலை இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா தெரிவித்துள்ளார்.

அஜித், வித்யா பாலன், ஷ்ரத்தா ஸ்ரீநாத் இணைந்து நடிக்கும் படம் ’நேர்கொண்ட பார்வை’.இப்படத்தின் சூப்பரான ட்ரெயிலர் கடந்த வாரம் வெளியாகி யூடிபில் அபார சாதனை நிகழ்த்திவருகிறது.

ஒட்டுமொத்த படப்பிடிப்பும் நிறைவடைந்து படத்தின் இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்றுவருகின்றன. அஜித் தனது காட்சிகளுக்கான டப்பிங் பணியில் சமீபத்தில் ஈடுபட்டார். அனைத்து நடிகர்களும் டப்பிங் பணிகளை முடித்துள்ள நிலையில் யுவன் ஷங்கர் ராஜா தனது ட்விட்டர் பக்கத்தில், “நேர்கொண்ட பார்வை படத்தின் பின்னணி இசையமைப்பு பணியைத் தொடங்குவதில் மகிழ்ச்சி” எனப் பதிவிட்டுள்ளார். இதனால் இப்படம் ஆகஸ்டில் ரிலீஸாவதில் எந்தப் பிரச்சினையும் இல்லை என்பது தெளிவாகியுள்ளது.

இப்படத்தின் ரிலீஸ் தேதி ஆகஸ்ட் 10 தேதி என தயாரிப்பு நிறுவனம் அதிகாரபூர்வமாக அறிவித்திருந்த நிலையிலும் சிலர் ஆகஸ்ட் 10ம் தேதி சனிக்கிழமையாக இருப்பதால் அம்மாதத்தின் 1ம் தேதி வியாழக் கிழமையாக இருப்பதால் அன்றே ரிலீஸாகக்கூடும் என்று செய்தி கிளப்பி வருகிறார்கள். இச்செய்திகளுக்கு எந்த விளக்கமும் கொடுக்காமல் தயாரிப்பு தரப்பு மவுனம் காத்துவருகிறது.