நடிகர் விஜய்யுடன் இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா சந்தித்தபோது எடுத்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் விஜய் (vijay). இவர் நடிப்பில் தற்போது பீஸ்ட் (Beast) படம் தயாராகி உள்ளது. நெல்சன் இயக்கி உள்ள இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டேவும், வில்லனாக செல்வராகவனும் நடித்துள்ளனர். 

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred

சன் பிக்சர்ஸ் நிறுவனம் பிரம்மாண்டமாக தயாரிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து பின்னணி பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. சமீபத்தில் டப்பிங் பணிகளை முடித்த விஜய் தற்போது ஓய்வெடுத்து வருகிறார்.

இந்நிலையில், நடிகர் விஜய்யுடன் இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா திடீர் சந்திப்பு மேற்கொண்டுள்ளார். விஜய்யுடன் யுவன் சந்தித்தபோது எடுத்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.

தற்போது அஜித்தின் வலிமை படத்தில் பணியாற்றி வரும் யுவன் அடுத்ததாக விஜய்யுடன் கூட்டணி அமைக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. தளபதி 67 படத்தில் இந்த கூட்டணி இணையும் என கூறப்படுகிறது. 

தளபதி 67 படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்க உள்ளாராம். அந்த படத்தின் மூலம் விஜய்யும் - யுவன் சங்கர் ராஜாவும் 19 ஆண்டுகளுக்கு பின் இணைந்து பணியாற்ற உள்ளதாக கூறப்படுகிறது. இவர்கள் இருவரும் கடைசியாக கடந்த 2003-ம் ஆண்டு வெளியான ‘புதிய கீதை’ இணைந்து பணியாற்றி இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.