இசைஞானி இளையராஜா இளைய மகன் யுவன் சங்கர் ராஜா இசைக்கு மிக பெரிய ரசிகர் கூட்டமே உள்ளது. சில குடும்ப பிரச்சனை காரனாகமாக இசையமைக்காமல் இருந்து வந்த இவர்.

தற்போது 10 படைகளுக்கும் மேல் இசையமைத்து வருகிறார், இந்நிலையில் ஏற்கனவே ஒரு ஹாலிவுட் படத்திற்கு இசையமைத்து வருகிறார். அதே போல் ஒரு ஹாலிவுட் நடிகருக்கும் தற்போது இசையமைத்துள்ளார்.

அவர் வேறு யாரும் இல்லை ஜேம்ஸ் பாண்ட் சீரியஸில் நடித்த பியர்ஸ் பிராஸ்னன் தான். இவர் நடித்த இந்திய விளம்பரம் ஒன்றிற்கு யுவன் இசையமைத்துள்ளார்.

இதில் ஜேம்ஸ் பாண்ட் இசையை கொஞ்சம் மாற்றம் செய்து இசையமைத்துள்ளார். இவை ரசிகர்களிடம் பெரிய வரவேற்பை பெற்றுள்ளது. இதற்காக பலரும் யுவன்னுக்கு வாழ்த்துக்கள் கூறி வருகின்றனர்.